வீடு / சமையல் குறிப்பு / பீஹாரி லிட்டி சோக்கா

Photo of Bihari litti chokha by Subashini Krish at BetterButter
199
0
0(0)
0

பீஹாரி லிட்டி சோக்கா

Jul-17-2018
Subashini Krish
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீஹாரி லிட்டி சோக்கா செய்முறை பற்றி

இது பீகாரின் சிறப்பு உணவாகும்.சட்டு (Sattu)எனப்படும் கருப்பு கொண்டை கடலை மாவும்,கோதுமை மாவும் கொண்டு செய்யப்படும் இது பீஹாரின் பாரம்பரிய உணவாகும்.

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • కఠినము
 • ప్రతి రోజు
 • బీహార్
 • నూనె లేకుండ వేయించటం
 • అల్పాహారం మరియు బ్రంచ్
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. லிட்டி செய்ய தேவையான பொருட்கள்:- கோதுமை மாவு 1/4 கிலோ
 2. நெய் ஒரு மேசைக்கரண்டி
 3. உப்பு தேவையான அளவு
 4. சட்டு மாவு ஒரு கப்
 5. கடுகு எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
 6. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2
 7. பொடியாக நறுக்கிய இஞ்சி அரை அங்குலம்
 8. பெருங்காயம் ஒரு சிட்டிகை
 9. மிளகாய்த் தூள் கால் தேக்கரண்டி
 10. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
 11. சோக்கா செய்ய தேவையான பொருட்கள்
 12. விதையில்லாத பெரிய கத்திரிக்காய் 2
 13. வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு ஒன்று
 14. பழுத்த தக்காளி ஒன்று
 15. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று
 16. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2
 17. சிகப்பு மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
 18. உப்பு தேவையான அளவு
 19. கடுகு எண்ணெய் 2 மேசைக்கரண்டி
 20. கொத்தமல்லி தழை அலங்கரிக்க

வழிமுறைகள்

 1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு நெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்
 2. நெய் மாவில் நன்றாக சேருமாறு விரல்களால் நன்கு பிசறி விடவும்
 3. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து அரை மணி நேரம் மாவை ஊற விடவும்
 4. சட்டு மாவு தயார் செய்ய வறுத்த கருப்பு கொண்டை கடலை(பொரி கடையில் கிடைக்கும்) அரை கப் எடுத்துக் கொண்டு கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
 5. இதனுடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் இஞ்சி பெருங்காயம் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும்
 6. கடுகு எண்ணெயும் சிறிதளவு தண்ணீரும் சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு பிசறி வைத்துக் கொள்ளவும்
 7. பிசைந்து வைத்த கோதுமை மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கிண்ணம் போல் அழுத்தி தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்
 8. பிசறி வைத்த சட்டு மாவை கோதுமை மாவு கிண்ணங்களில் நிரப்பி வைக்கவும்
 9. உள்ளே வைத்த பூரணம் வெளியே வராதவாறு கோதுமை மாவை உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்
 10. மேலே சிறிது நெய் தடவவும்
 11. நான் இவற்றை AirFryerல் 200 டிகிரி செல்சியஸில் 15 நிமிடங்கள் பேக் செய்து இருக்கிறேன்
 12. பாரம்பரியமாக இது விறகடுப்பு அல்லது தந்தூரி அடுப்பில் செய்யப்படும். இவற்றைப் பொரித்தோ, தோசைக்கல்லில் வேகவைத்தோ கூட பரிமாறலாம்.
 13. சோக்கா செய்ய கத்திரிக்காய் மற்றும் தக்காளியை தணலில் சுட்டு தோலுரித்து கொள்ளவும் இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி தழை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கடுகு எண்ணெயை காய வைத்து மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். சூடான லிட்டியை நெய்யில் முக்கி சோக்காவுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்