வீடு / சமையல் குறிப்பு / கேப்பை மாவு அல்வா

Photo of Ragi flour Halwa by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
401
2
0.0(0)
0

கேப்பை மாவு அல்வா

Jul-17-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
75 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேப்பை மாவு அல்வா செய்முறை பற்றி

கேப்பை மாவை வைத்து எளிதாக செய்யக்கூடிய அல்வா.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேப்பை மாவு - 1 கப்
  2. ப்ரவுன் சுகர் - 1 1/2 -2 கப்
  3. நெய் -1/2 கப்
  4. முந்திரி -10 பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் 1 கப் கேப்பை மாவை 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக்கொள்ளவும்.
  3. கரைத்த மாவை வடிகட்டியில் வடிகட்டவும்.இதே போல் இரண்டு மூன்று முறை வடிகட்டி பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.சக்கை வடிகட்டியில் தங்கி விடும். அது தேவை இல்லை.
  4. இப்பொழுது கேப்பை மாவு பால் தயார்.
  5. ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் கேப்பை மாவு பாலை ஊற்றி கட்டி இல்லாமல் கிளறவும்.
  6. 10-15 நிமிடம் கிளறிய பின்பு பால் சிறிது கெட்டியாக வரும். இப்பொழுது அதனுடன் ப்ரவுன் சுகரை சேர்த்து நன்கு கிளறவும்.
  7. ப்ரவுன் சுகர் சேர்த்து கிளறிய கெட்டியாக வரும் பொழுது சிறிது சிறிதாக நெய் சேர்த்து அடிப்பிடிக்காமல் நன்கு கிளறவும்.
  8. கெட்டியாக அல்வா பதம் வந்ததும் அதனுடன் முந்திரியை சேர்த்து ஊற்றி நெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும் .
  9. இப்பொழுது சுவையான கேப்பை மாவு அல்வா தயார்.
  10. ஒரு்தட்டில் நெய் தடவி அதில் அல்வாவை பரப்பி ஆற விடவும்.
  11. நன்கு ஆறியதும் விரும்பிய வடிவில் வெட்டி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்