வீடு / சமையல் குறிப்பு / மீன் பிரியாணி

Photo of Fish briyani by Revathi Reva at BetterButter
180
0
0.0(0)
0

மீன் பிரியாணி

Jul-18-2018
Revathi Reva
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் பிரியாணி செய்முறை பற்றி

வித்தியாசமான சுவை தரும் மீன் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசுமதி அரிசி 2 கப்
  2. முள்ளில்லாத மீன் 1/2 கிலோ
  3. வெங்காயம் 3+2
  4. தக்காளி 3
  5. பச்சைமிளகாய் 5
  6. இஞ்சிபூண்டு விழுது 3ஸ்பூன்
  7. புதினா,கொத்தமல்லி தலா ஒரு கைப்பிடி
  8. தேங்காய்பால் 1கப்
  9. மிளகாய்தூள் 1+1ஸ்பூன்
  10. கரம் மசாலா 1ஸ்பூன்
  11. பிரியாணி அரிசி 1ஸ்பூன்
  12. தயிர் 1/2 கப்
  13. எலுமிச்சை 1ஸ்பூன்
  14. பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை, தலா 3
  15. உப்பு
  16. வெண்ணை 2ஸ்பூன்
  17. எண்ணெய்

வழிமுறைகள்

  1. மீன் துண்டுகளை கழுவி ஒரு ஸ்பூன் மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஊற வைக்கவும். 1/2 வேக்காடு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அரிசியை ஒருமுறை களைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். உலை நீர் வைத்து அதில் உப்பு, கொஞ்சம் புதினா, ஒரு பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து கொதித்ததும் அரிசியை சேர்த்து அரைவேக்காடு அளவுக்கு வடித்து எடுக்கவும்.2 வெங்காயத்தை வெண்ணையில் சிவந்த பொன்னிறமாக தீயாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்கள் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். புதினா, கொத்தமல்லி சிறிது சேர்க்கவும். இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  3. தக்காளி சேர்த்து வதக்கி, தூள் வகைகள் சேர்த்து வதக்கி தயிர் சேர்க்கவும், தேங்காய்பால் சேர்த்து கொதிக்கவுடவும். நன்கு சேர்ந்து வந்ததும், அதில் பாதி அளவு எடுத்து தனியாக வைக்கவும்.
  4. மீன் துண்டுகளை அதில் வைத்து மெல்லமாக உடையாமல் கிளறவும்.2 துண்டுகள் மீன் எடுத்து தனியாக வைக்கவும். பின் வதங்கிய குழம்பின் மேல் வடித்த சாதத்தை பரவினால் போல் வைக்கவும், அதன் மேல் எடுத்து வைத்த குழம்பை பாதி அளவு பரவினால் போல் ஊற்றி, மீன் துண்டுகள் வைத்து, வதக்கிய வெங்காயத்தை பாதி தூவி மீண்டும் சாதத்தை வைத்து மீதி குழம்பு, வதக்கிய வெங்காயம் தூவி எலுமிச்சை பழம், மீதமுள்ள புதினா,கொத்தமல்லி தூவி, குங்கமப்பூ கரைசல் அங்கங்கு தெளித்து மூடி தம்மில் 10 நிமிடம் விடவும். அரை மணிநேரம் கழித்து இறக்கவும். மீன் பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்