Photo of Kuska by Revathi Reva at BetterButter
435
0
0.0(0)
0

குஸ்கா

Jul-18-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குஸ்கா செய்முறை பற்றி

நான் வெஜ் சேர்க்காமல் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசுமதி அரிசி 3 கப்
  2. வெங்காயம் 4
  3. தக்காளி 3.
  4. பச்சைமிளகாய் 5
  5. புதினா கொத்தமல்லி ஒரு கைப்பிடி
  6. இஞ்சிபூண்டு விழுது 3 விழுது
  7. பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 3
  8. எண்ணெய்
  9. உப்பு
  10. எலுமிச்சை 1/2 பழம்
  11. தயிர் 1/2 கப்
  12. தேங்காய்பால் 1 1/2 கப்
  13. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  14. கரம்மசாலா 1ஸ்பூன்
  15. பிரியாணி மசாலா 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  2. புதினா, கொத்தமல்லி பாதி அளவு சேர்த்து வதக்கி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கவும். தூள் வகைகள் சேர்த்து வதக்கி தயிர் சேர்க்கவும்.
  3. நன்கு சேர்ந்து வந்ததும் தேங்காய்பால் 1 1/2 கப் தண்ணீர் 3 1/4 கப் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் அரிசியை களைந்து சேர்க்கவும். 5 நிமிடம் முழுதீயில் மூடி வேகவுடவும். குக்கர் எனில் விசில் போடாமல் 5 நிமிடம் விட வேண்டும்.
  4. பின் திறந்து எலுமிச்சை, புதினா, கொத்தமல்லி, கேசரி கலர் ( விரும்பினால்) சேர்த்து 10 நிமிடம் தம்மில் விட்டு இறக்கவும்
  5. அரை மணி நேரம் கழித்து திறக்கவும். குஸ்கா தயார். சிக்கன், மட்டன் குருமா, தயிர்பச்சடி என சைட்டிஷ்டன் பொருத்தமாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்