வீடு / சமையல் குறிப்பு / கார்ன் சீஸ் பால்ஸ்

Photo of Corn Cheese Balls by Ramya Sambandam at BetterButter
545
2
0.0(0)
0

கார்ன் சீஸ் பால்ஸ்

Jul-18-2018
Ramya Sambandam
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கார்ன் சீஸ் பால்ஸ் செய்முறை பற்றி

பிரோஸின் கார்ன் வைத்து செய்யப்படும் ஒரு உணவுப் பண்டம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ப்ரொஜென் கார்ன் அல்லது ஸ்வீட் கார்ன்
  2. வேகவைத்த உருளை கிழங்கு
  3. சீஸ் தேவையான அளவு
  4. சோள மாவு
  5. சிவப்பு மிளகாய்த்தூள் தேவையான அளவு
  6. கரம் மசாலா தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. பிரேட் க்ரம்ஸ் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பிரேஷ் கார்ன் உபயோகப்படுத்தினால் அதை குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
  2. ப்ரொஜென் கார்ன் உபயோகப்படுத்தினால் 3 நிமிடம் microwave இல் வேக வைத்து எடுக்கவும்
  3. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்
  4. வேக வைத்த கார்னை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  5. ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு அரைத்த கார்ன் விழுதையும் போடவும்
  6. பின்னர் அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, சோள மாவு சேர்த்து நன்கு பிசையவும்
  7. பிசைந்த மாவை சிறிது எடுத்து அதை உருண்டைப் பிடிக்கவும் அந்த உருண்டையின் நடுவே சீஸ் வைத்து நன்கு பிடிக்கவும்
  8. பின்னர் அந்த உருண்டையை பிரேட் க்ரும்ஸ் இல் ரோல் செய்து எடுக்கவும்
  9. இவ்வாறு அனைத்து மாவையும் உருண்டை பிடிக்கவும்
  10. வாணலியில் எண்ணெய் வைத்து அது மிதமான சூட்டிற்கு வந்த பிறகு பிடித்த உருண்டைகளை அதில் போட்டு வறுக்கவும்
  11. உருண்டைகளை மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
  12. பொரித்த உருண்டைகளை தட்டில் வைத்து அதனுடன் கேட்சப் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்