வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் புலாவ்

Photo of Bringal pulav by Krishnasamy Vidya Valli at BetterButter
157
0
0.0(0)
0

கத்திரிக்காய் புலாவ்

Jul-18-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் புலாவ் செய்முறை பற்றி

எளிமையான ரைஸ் வெரைட்டி. தொட்டுக்கொள்ள தயிர் சாலட் போதுமானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி 1 கப்
  2. கத்திரிக்காய் 6
  3. வெங்காயம் 1
  4. குடைமிளகாய் 1
  5. தக்காளி 1
  6. உப்பு -3/4 தேக்கரண்டி
  7. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது -1 தேக்கரண்டி
  8. வறுத்து திரிக்க
  9. கடலைபருப்பு -1 தேக்கரண்டி
  10. உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
  11. கொத்தமல்லி விதை -1 தேக்கரண்டி
  12. வேர்கடலை 2 தேக்கரண்டி
  13. தேங்காய் துருவல் -1 மேஜைக்கரண்டி
  14. மிளகாய் வத்தல் -3 முதல் 4
  15. எள்ளு -1/4 தேக்கரண்டி
  16. கட்டி பெருங்காயம் 1 சிறிய துண்டு
  17. மிளகு -1/4 தேக்கரண்டி
  18. சீரகம் 1/4 தேக்கரண்டி
  19. கஸகஸா 1/2 தேக்கரண்டி
  20. பட்டை 1 சிறிய துண்டு
  21. ஏலக்காய் கிராம்பு தலா 3
  22. எண்ணெய் -1/4 தேக்கரண்டி
  23. தாளிக்க
  24. நெய் 1 தேக்கரண்டி
  25. கடுகு உளுந்து பருப்பு தலா 1/2 தேக்கரண்டி
  26. சீரகம் 1/2 தேக்கரண்டி
  27. கருவேப்பிலை 2 ஆரக்கு
  28. முந்திரி -5 (விருப்பப்பட்டால்)

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊறவைத்து குழையாமல் வேகவைத்துக்கொள்ளவும்
  2. வறுத்து திரிக்க கொடுத்தவற்றை வறுத்து கரகரப்பாக திரித்துக்கொள்ளவும்
  3. காய்களை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பச்ச வாசனை போனவுடன் கத்திரிக்காய் குடைமிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. நன்றாக வதங்கியவுடன் உப்பு மற்றும் வறுத்து திரித்ததை சேர்த்து கிளறவும்
  7. சாதம் சேர்த்து கிளறவும்
  8. கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்