வீடு / சமையல் குறிப்பு / ரம்புத்தான் சாகோசிப் மஃபின்ஸ்

Photo of Rambuthaan chocochip muffins by Adaikkammai Annamalai at BetterButter
104
6
0.0(0)
0

ரம்புத்தான் சாகோசிப் மஃபின்ஸ்

Jul-18-2018
Adaikkammai Annamalai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரம்புத்தான் சாகோசிப் மஃபின்ஸ் செய்முறை பற்றி

பெட்டர் பட்டர் தமிழ் முதலாம் ஆண்டு விழாவை சிறப்பிக்க எனது சமயலறையிலருந்து வரும் முதல் ரெசிபி ரம்புத்தான் சாகோசிப் மஃபின்ஸ்,, ரம்புத்தான் என்பது ஒரு பழம் அது மலேசியா இந்தோனேசியா நாட்டை சேர்ந்தது அது பார்க்க முள்ளு முள்ளாக இருக்கும் தோலை நீக்கி உள்ளே போனால் நொங்கு போல் வலு வழுவென்று இருக்கும் அதையும் இரண்டாக பிரித்து உள்ளே உள்ள கொட்டை நீக்கி விட்டு சுவைக்கலாம், அதை வைத்து நான் மஃபீன்ஸ் செய்துள்ளேன் எளிமையான முறையில் ,,

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • பேக்கிங்
  • மைக்ரோவேவிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா - 2 கப்
  2. பொடித்த சர்க்கரை - 1 கப்
  3. உருகிய பட்டர் - 1/2 கப்
  4. பால் - 1/4 கப்
  5. ரம்புத்தான் பழ சாறு - 1/4 கப்
  6. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 tsp
  7. பேக்கிங் பவுடர் - 1 tsp
  8. முட்டை - 1

வழிமுறைகள்

  1. இ்துதான் ரம்புத்தான் ,, இதன் தோலை நீக்கி சதை யை எடுத்து அதில் இருக்கும் கொட்டையை நீக்கி எடுத்து கொள்ளவும்
  2. கொட்டையை நீக்கி எடுத்த சதையை ப்ளேண்டரில் அரைத்து வடிகட்டி சாறாக எடுக்க வேண்டும்
  3. பின் தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்
  4. முதலில் ஒரு அகல பாத்திரத்தில் மைதா மற்றும் பேக்கிங் பவுடரை வடிகட்டியில் சலித்து எடுத்து கொள்ளவும்
  5. பின்னர் ஒரு சிறிய பௌளில் முட்டை சேர்த்து நன்றாக விஸ்க் செய்து, பால், வெண்ணிலா எஸ்ஸென்ஸ், ரம்புத்தான் பழச்சாறு, உருகிய பட்டர் சேர்த்து விஸ்க் செய்து கடைசியாக பவுடர் சுகர் சேர்த்து நன்றாக விஸ்க் செய்யவும்,, கட்டியில்லாமல்
  6. சலித்து வைத்திருந்த மாவில் கலக்கி வைத்த முட்டை கலவையை அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தண்ணியாக இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கரைத்து எடுத்து கொள்ளவும் ,, இப்பொழுது கேக் கலவை தயார்
  7. பிறகு உங்களுக்கு பிடித்த கப் கேக் அச்சை கொண்டு அதில் ஊற்றவும், நான் சிலிகான் நட்சத்திர அச்சை கொண்டு செய்துள்ளேன்,,மேலே சாகோ சிப் தொப்பிங்ஸ் தூவவும்
  8. பின்னர் ஓவனை ப்ரீஹீட் செய்து 160℃ யில் 20- 25 நிமிடம் பேக் செய்யவும்,
  9. வெந்த பிறகு எடுத்து 10 நிமிடம்ஆற வைத்து பரிமாறலாம்,, என்ன அழகாக வடிவம் வந்துள்ளது பொசு பொசு என்று பாருங்கள்,,
  10. சுவையான நாவுறும் ரம்புத்தான் மஃபின்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்