வீடு / சமையல் குறிப்பு / பேக் செய்யாத ஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக்

Photo of No bake Strawberry cheese cake by Benazer Abdul Kader at BetterButter
347
4
0.0(0)
0

பேக் செய்யாத ஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக்

Jul-18-2018
Benazer Abdul Kader
70 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பேக் செய்யாத ஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக் செய்முறை பற்றி

ஸ்ட்ராபெர்ரி மற்றும் க்ரீம் சீஸ் கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை இது

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • சில்லிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ஸ்ட்ராபெர்ரி பழங்கள் 2 கப்
  2. டைஜஸ்டிவ் பிஸ்கட் 400 கிராம்
  3. கொக்கோ பவுடர் 2 டீஸ்பூன்
  4. பட்டர் 150 கிராம்
  5. சீஸ் லேயர் செய்ய:
  6. க்ரீம் சீஸ் அரை கப்
  7. விப்பிங் கிரீம் 1 சாச்சட்
  8. பால் அரை கப்
  9. ஜெலட்டின் இரண்டரை டீஸ்பூன்
  10. கண்டன்ஸ்டு மில்க் அரை கப்

வழிமுறைகள்

  1. டைஜஸ்டிவ் பிஸ்கட்டை மிக்சியில் நன்றாகப் பொடித்து சலித்துக் கொள்ளவும்
  2. பின்பு அதனுடன் கொக்கோ பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்
  3. பின்பு லேசாக உருகிய நிலையில் பட்டரை எடுத்து அதனுடன் கலந்து கொள்ளவும்
  4. பின்பு அதனை பேக்கிங் ட்ரேயில் வைத்து நன்கு அழுத்தி கப்பின் பின்புறம் வைத்து நன்கு அழுத்தம் கொடுத்து சமப்படுத்தவும்.
  5. பின்பு அதனை ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து செட் செய்யவும்.
  6. இப்போது விப்பிங் கிரீம் பவுடரை பாலுடன் கலந்து நன்கு கெட்டியாகும் வரை நன்கு விஸ்க் செய்யவும்.
  7. பின்னர் ஜெலட்டின் உடன் சிறிது தண்ணீர் விட்டு முள்கரண்டியால் கலக்கி நன்கு கரைய வைத்து சூடாக்கி பின்பு ஆற விடவும்.
  8. இப்போது விப்பிங் கிரீம் உடன் கண்டன்ஸ்டு மில்க், க்ரீம் சீஸ் மற்றும் ஜெலட்டின் போட்டு நன்கு விஸ்க் செய்யவும்.
  9. இப்போது ஸ்ட்ராபெரியின் காம்பு பாகத்தை வெட்டி எடுத்துவிட்டு ஸ்ட்ராபெர்ரி பழங்களை பாதி துண்டுகளாக வெட்டி பேக்கிங் ட்ரேயின் ஓரங்களில் பிஸ்கட் லேயரின் மேல் அடுக்கவும்.
  10. மீதமிருக்கும் ஸ்ட்ராபெர்ரி பழங்களை சிறு துண்டுகளாக வெட்டி விப்பிங் க்ரீம் கலவையுடன் கலக்கவும்.
  11. பின்னர் இதனை பிஸ்கட் லேயர் மீது ஊற்றி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்யவும்.
  12. பின்னர் இதன் மீது தேவையான அலங்காரம் செய்து வெட்டிப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்