வீடு / சமையல் குறிப்பு / பேக் செய்யாத அவல் பால் கேக்

Photo of No bake poha milk cake by saranya sathish at BetterButter
644
2
0.0(0)
0

பேக் செய்யாத அவல் பால் கேக்

Jul-18-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பேக் செய்யாத அவல் பால் கேக் செய்முறை பற்றி

பேக் செய்யாத அவல் பால் கேக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இம்யுனிட்டி அரிசி அவல் - 1 1/2 கப்
  2. பால் - 1 கப்
  3. வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன்
  4. ஆளி விதை பொடி - 2 டேபிள் ஸ்பூன்
  5. வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
  6. பாதாம் - 1 டேபிள் ஸ்பூன்
  7. தேங்காய் துருவல் - 1/4 கப்
  8. ஏலக்காய் - 1

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அவல், தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊரவிடவும்.
  2. பின்னர் தண்ணீரை பிழிந்து அவலை மிக்சியில் சேர்க்கவும். அதனுடன் பாதாம், வெல்லம்,ஆளி விதை பொடி,வறுத்த வேர்க்கடலை,தேங்காய் துருவல்,ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
  3. அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து பால் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  4. பின் கேக் மவுல்டில் நெய் தடவி இந்த கலவையை சமமாக சேர்த்து சற்று அழுத்தி விடவும்.
  5. 15 நிமிடம் கழித்து வேறு தட்டிற்க்கு மாற்றி கட் செய்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்