வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சுடுதல்

Photo of Fire Roasted Coconut by Menaga Sathia at BetterButter
0
2
0(0)
0

தேங்காய் சுடுதல்

Jul-18-2018
Menaga Sathia
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சுடுதல் செய்முறை பற்றி

ஆடிமாதம் 1ந் தேதியன்று இந்த தேங்காயினை ஸ்டப்ட் செய்து சுட்டு வினாயகருக்கும்,அம்மனுக்கும் வைத்து படைப்பாங்க.

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • మీడియం/మధ్యస్థ
 • ఇతర
 • తమిళనాడు
 • చిరు తిండి
 • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. தேங்காய் -1
 2. மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்
 3. மூங்கில் குச்சி -1, பெரியது
 4. குங்குமம் -தேவைக்கு
 5. புளி - நெல்லிக்காயளவு
 6. ஸ்டப்பிங் செய்ய:
 7. பச்சரிசி -2 டேபிள்ஸ்பூன்
 8. துருவிய வெல்லம் -3 டேபிள்ஸ்பூன்
 9. ஏலக்காய் -2
 10. பாசிப்பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
 11. பொட்டுக்கடலை -1 டேபிள்ஸ்பூன்
 12. அவல் -1 டேபிள்ஸ்பூன்(நான் சிகப்பு அவல் உபயோகபடுத்தியுள்ளேன்)
 13. எள் - 1/2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

 1. முதலில் தேங்காயின் மேல்பாகத்தை வழுவழுப்பாகும் வரை கேரட் துறுவலில் துருவவும்.
 2. மூங்கில் குச்சியை 30 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிடவும்.
 3. வெறும் கடாயில் பாசிபருப்பு,எள்,அரிசி இவற்றை வறுத்துக் கொண்டு,ஸ்டப்பிங் செய்ய கொடுத்துள்ள மற்ற பொருட்களோடு கொரகொரப்பாக பொடிக்கவும்
 4. தேங்காயின் மேலே ஒரு கண்ணில் மட்டும் துளையிட்டு நீரை வடித்துவைக்கவும்.
 5. துளையின் உள்ளே கொஞ்ச கொஞ்சமாக ஸ்டப்பிங் போடவும்.
 6. இடையிடையே தேங்காய் நீரை கொஞ்சமாக ஊற்றவும்.
 7. ஒருகட்டத்தில் தேங்காய் நீர் வெளியே வரும்போது ஸ்டப்பிங் போடுவதை நிறுத்தி மஞ்சள், குங்குமம் தடவவும்
 8. பின் மூங்கில் குச்சியை சொருகி மஞ்சள், புளி வைத்து சுற்றி அடைக்கவும்
 9. நேரடியாக அடுப்பில் வைத்து சுடவும்
 10. ஒருகட்டத்தில் தேங்காய்நீர் சுடும்போது ஒழுகும்,பயப்படவேண்டாம்
 11. தேங்காய் வெந்து வெடிப்பு வரும்போது அடுப்பை அணைக்கவும்.
 12. அப்படியே சாமிக்கு வைத்து படைத்தபின்,ஒட்டை எடுத்துவிட்டு ஸ்டப்பிங் உடன் சுட்ட தேங்காய் சாப்பிட சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்