வீடு / சமையல் குறிப்பு / கொண்டைகடலை சால்னா

Photo of channaa salna by Apsara Fareej at BetterButter
295
1
0.0(0)
0

கொண்டைகடலை சால்னா

Jul-19-2018
Apsara Fareej
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கொண்டைகடலை சால்னா செய்முறை பற்றி

இந்த சால்னாவை கடலை இல்லாமல் வெறுமெனவே செய்தும் சப்பாத்தி, பரோட்டாவிற்கு ஊற்றி சாப்பிடலாம். கடை சால்னா போன்ற சுவையில் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நன்கு ஊறவைத்த கொண்டைகடலை - 1 கப்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி( சிறியதாக) - 1
  4. இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  5. கறுவேப்பிலை ஒரு கொத்து
  6. மல்லித்தழை - சிறிதளவு
  7. தேங்காய் பால் - 1/2 கப்( திக்கானது)
  8. சீரகத்தூள்,சோம்புத்தூள்,கரம்மசாலாத்தூள்- தலா 1/2 தேக்கரண்டி
  9. மஞ்சள்த்தூள் - 1/4 தேக்கரண்டி
  10. மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி(உங்கள் காரத்திற்கேற்ப)
  11. மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
  12. தாளிக்க:-)
  13. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  14. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  15. சோம்பு - 1/2 தேக்கரண்டி
  16. பிரிஞ்சி இலை( bay leaf)-1
  17. காய்ந்த மிளகாய் - 2

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், தாளிக்க கொடுத்திருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
  2. பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியையும் , கறுவேப்பிலையையும் சேர்த்து அரை ஸ்பூன் உப்பு போட்டு வதக்கவும்.
  3. இரண்டு நிமிடம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வாசம் வர வதக்கவும்.
  4. மல்லித்தூள் தவிர்த்து மற்ற மசாலாத்தூள்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
  5. பிறகு மல்லித்தூள் சேர்த்து வதக்கி அதில் ஊறிய கொண்டைகடலையையும், மல்லி இலையும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு ஒரு நிமிடம் வைக்கவும்,
  6. பின்பு மூன்று டம்ளர் தண்ணீரும், தேங்காய் பாலையும் சேர்த்து தெர்வையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி விட்டு குக்கரை மூடி விடவும். ஒரு விசில் வந்ததும், அடுப்பை குறைந்த தீயில் 15 நிமிடம் வைத்து இறக்கவும்.
  7. சுலபமான முறையில் சூப்பரான கொண்டைக்கடலை சால்னா ரெடி. இது சப்பாத்தி, பரோட்டாவிற்கு ஏற்ற பக்க உணவாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்