வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பிரியாணி

Photo of Chicken biryani by Zainab Fazeela at BetterButter
850
4
0.0(0)
0

சிக்கன் பிரியாணி

Jul-19-2018
Zainab Fazeela
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

பாஸ்மதி அரிசி மற்றும் சிக்கன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாஸ்மதி அரிசி ½ கிலோ
  2. சிக்கன் ¾ கிலோ
  3. நெய் 150 கிராம்
  4. எண்ணெய் 150 கிராம்
  5. பல்லாரி வெங்காயம் ¼ கிலோ
  6. தக்காளி ¼ கிலோ
  7. இஞ்சிபூண்டுவிழுது 3 (2+1) மே.க
  8. தயிர் 1கப்
  9. பச்சை மிளகாய் 3 (2+1)
  10. தனி மிளகாய் தூள் 2 மே.க
  11. மஞ்சள் தூள் ½ மே.க
  12. மல்லி தூள் 1 மே.க
  13. சோம்பு தூள் 1 மே.க
  14. சீரகத் தூள் 1 மே.க
  15. கரம் மசாலா 1 மே.க
  16. எலுமிச்சை 1 (½ + ½)
  17. புதினா இலை 1 கட்டு
  18. கொத்தமல்லி இலை ½ கட்டு
  19. பட்டை 1 நீட்ட துண்டு
  20. ஏலக்காய் 6
  21. கிராம்பு 4
  22. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. அரிசியினை 30 நிமிடம் ஊற வைக்கவும்
  2. சிக்கனுடன் தயிர்,1 மே.க இஞ்சி பூண்டு விழுது, 2பச்சைமிளகாய், தனிமிளகாய்த்தூள்,தனியாதூள், சோம்புத்தூள், சீரகத்தூள், கரம் மசலாத்தூள், சிறிது கொத்தமல்லி மற்றும் புதினா, பாதி எலுமிச்சை சாறு தேவையான அளவு உப்பு போட்டு 1/2 மணிநேரம் ஊற வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய்,நெய் ஊற்றி பட்டை கிராம்பு மற்றும் ஏலக்காய் போடவும் கொஞ்சம் பொரிந்ததும்
  4. அதில் வெங்காயம் போட்டு வதக்கவும்.பிறகு மீதி உள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். நன்கு வெங்காயம் மற்றும் தக்காளி மசிந்ததும்
  6. மசாலா போட்டு ஊற வைத்த சிக்கனை சேர்த்து அதோடு மீதமுள்ள பச்சைமிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்
  7. சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் அதில் (1 கப் அரிசிக்கு 1 ½ கப் வீதம்) தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  8. கொதி வந்தபின்பு ஊற வைத்த அரிசியினை (நன்கு தண்ணீரை வடிய வைத்து) போடவும்.சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும். ½பாகம் சாதமானதும்
  9. ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் உற்றி புட் கலர் கலந்து வைக்கவும் இதை சாதத்தின் மேல் சுற்றி வர ஊற்றவும்.
  10. கடைசியில் பாதி லெமன் ஜூஸ் கலந்து தெளித்து, அடுப்பின் மேல் தோசை தவாவை வைத்து அதன் மேல் சட்டியை வைத்து குறைந்த தணலில் அரை மணி நேரம் வேக வைத்து எடுத்தால் சுவையான சிக்கன் பிரியாணி தயார்.
  11. தோசை தவாவின் மீது வைப்பதால் அடி பிடிக்காமல் இருக்கும்.
  12. பிரியாணியை நடுவில் இருந்து பிரட்டாமல் ஓரத்தில் இருந்து பிரட்டி விடவும். அப்போது தான் பாஸ்மதி அரிசி உடையாமல் வரும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்