வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் பிரியாணி

Photo of Vegetable Biryani by Jayasakthi Ekambaram at BetterButter
353
2
0.0(0)
0

வெஜிடபிள் பிரியாணி

Jul-19-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
105 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் பிரியாணி செய்முறை பற்றி

கேரட் பீன்ஸ் பட்டாணி காலிஃப்ளவர் கலந்து செய்யும் பிரியாணி சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று
  3. பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்று
  4. பட்டை ஒரு இன்ச் துண்டு
  5. கிராம்பு-2
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  7. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  8. கரம் மசாலாத்தூள் ஒரு ஸ்பூன்
  9. தனியாத்தூள் ஒரு ஸ்பூன்
  10. பிரிஞ்சி இலை ஒன்று
  11. பொடியாக நறுக்கிய கேரட் அரை கப்
  12. பச்சை பட்டாணி அரை கப்
  13. காலிஃப்ளவர் பூக்கள் அரை கப்
  14. பீன்ஸ் துண்டுகள் அரை கப்
  15. உப்பு தேவையான அளவு
  16. சமையல் எண்ணெய் 4 டீஸ்பூன்
  17. நெய் ஒரு ஸ்பூன்
  18. முந்திரி 6
  19. எலுமிச்சம்பழ ஜூஸ் ஒரு டீஸ்பூன்
  20. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை அரை கப்

வழிமுறைகள்

  1. பாசுமதி அரிசியை ஒரு தரம் கழுவி ஒரு கப் அரிசியில் 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. அடுப்பின் மேல் குக்கரை வைத்து அது காய்ந்ததும் எண்ணெயும் நெய்யும் ஊற்றவும்
  3. பிரிஞ்சி இலை பட்டை லவங்கம் தாளிக்கவும்
  4. வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்
  5. நன்றாக கூழாகும் வரை தக்காளியை வதக்கவும்
  6. இஞ்சி பூண்டு சேர்க்கவும்
  7. பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  8. மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் தனியாத்தூள் உப்பு சேர்த்து திரும்ப வதக்கவும்
  9. காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  10. பட்டாணியை சேர்த்து வதக்கவும்
  11. முந்திரியை போட்டு வதக்கவும்
  12. ஊறவைத்த தண்ணீரை ஊற்றவும்
  13. தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் அரிசியைப் போடவும்
  14. எலுமிச்சம் பழ ஜூஸில் சேர்க்கவும்
  15. குக்கரை மூடவும்
  16. இரண்டு விசில் வந்த பிறகு அடுப்பை ஆப் செய்யவும்
  17. அரை மணி நேரத்திற்கு பிறகு குக்கரை திறக்கவும்
  18. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்
  19. கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்