வீடு / சமையல் குறிப்பு / பல(நவ) தானிய மாவு

Photo of Multigrain flour by Asiya Omar at BetterButter
324
0
0.0(0)
0

பல(நவ) தானிய மாவு

Jul-20-2018
Asiya Omar
2880 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பல(நவ) தானிய மாவு செய்முறை பற்றி

சிறுதானியங்கள் அனைத்தும் இந்த மாவில் சேர்வதால் சத்தும் சுவையும் மிக்கது.காலை,இரவு நேர டிபனுக்கு இந்த மாவை பயன்படுத்தி அடை,தோசை,ரொட்டி,கூழ்,கொழுகட்டை இப்படி செய்து அசத்தலாம்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கேப்பை -1/4 கிலோ
  2. கோதுமை - கால் கிலோ
  3. கம்பு -1/4 கிலோ
  4. சோளம் - கால் கிலோ
  5. வரகு - கால் கிலோ
  6. குதிரைவாலி- 1/4 கிலோ
  7. சாமை-1/4 கிலோ
  8. திணை -கால் கிலோ
  9. அரிசி -1/4 கிலோ( விரும்பினால் சேர்க்கலாம்)
  10. ஒன்பது வகை தானியமும் சேர்வதால் மிகவும் ஊட்டசத்து மிக்கது.

வழிமுறைகள்

  1. எல்லா தானிய வகைகளும் வாங்கி கல்,மண் இல்லாமல் சுத்தம் செய்து நன்கு அலசவும்.
  2. நீர் வடிய விட்டு நிழலுல் ஒரு துணி விரித்து உலர்த்தவும்.
  3. நன்கு உலர்த்திய பின்பு லேசாக அடிகனமான பாத்திரத்தில் குறைந்த தீ வைத்து ஈரம் போக வெதுப்பி எடுக்கவும்.
  4. ஆற விட்டு அரவை மில்லில் கொடுத்து நன்கு திரித்து வாங்கி பயன் படுத்தவும்.
  5. சுவையான சத்தான பலதானிய மாவு தயார்.
  6. தயார் செய்து வைத்துக் கொண்டு தேவைக்கு எடுத்து பயன்படுத்தலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்