வீடு / சமையல் குறிப்பு / ரெஸ்டாரண்ட் முறையில் கோழி தம் பிரியாணி

Photo of Restaurant style chicken dum biryani by Nancy Samson at BetterButter
504
2
0.0(0)
0

ரெஸ்டாரண்ட் முறையில் கோழி தம் பிரியாணி

Jul-20-2018
Nancy Samson
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
80 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரெஸ்டாரண்ட் முறையில் கோழி தம் பிரியாணி செய்முறை பற்றி

நம்மில் பலருக்கும் பிரியாணி என்றால் பேரானந்தம். அதிலும் ரெஸ்டாரண்திகளில் கொடுக்கும் லேயர் பிரியாணி தேவாமிர்தம். உதிரி உதிரியாக சாதம், தம் போட்டதனால் கூடுதல் மனமும் சுவையும் கலந்து, சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை எனலாம். நான் ஒரு பிரியாணி பிரியை அதனால் இந்த மாதிரி பிரியாணியை எப்படியாவது செய்து விட வேண்டும் என்ற பிடிவாதத்தில் செய்தது. அப்படி ஒரு பாராட்டு வீட்டில். ரெஸ்டாரண்டில் சாப்பிட சுவை சற்றும் குறையாமல் அமோகமாக வந்தது. அப்பறம் என்ன பெட்டர் பட்டெரில் பகிர்ந்து விட வேண்டாமா. இதோ செய்முறை. செய்து மகிழுங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • சிம்மெரிங்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசுமதி அரிசி 2 கப்
  2. சிக்கன் 1/2கி
  3. தயிர் 1/4 கப்
  4. மிளகாய் தூள் 2 + 2 மேசைக்கரண்டி
  5. மல்லித்தூள் 2 + 1 மேசைக்கரண்டி
  6. கரம் மசாலா 1 + 1 மேசைக்கரண்டி
  7. மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
  8. சீரக தூள் 1/2 தேக்கரண்டி
  9. சோம்பு தூள் 1/4 தேக்கரண்டி
  10. பச்சை மிளகாய் 3 அல்லது 4
  11. இஞ்சி பூண்டு விழுது 2 + 2 மேசைக்கரண்டி
  12. பட்டை 2 + 2 இன்ச் துண்டு
  13. கிராம்பு 4 + 4
  14. ஏலக்காய் 2
  15. பிரிஞ்சி இலை 1 + 1
  16. அன்னாசி பூ 1 + 1
  17. ஜாதி பத்திரி 1/2 + 1/2
  18. சீரகம் 1/2 தேக்கரண்டி
  19. சோம்பு 1/2 தேக்கரண்டி
  20. நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் 3
  21. நீளவாக்கில் நறுக்கிய தக்காளி 2
  22. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி 1 + 1/2 கப்
  23. பொடியாக நறுக்கிய புதினா 1 + 1/2 கப்
  24. எலுமிச்சை சாறு - 1/4 கப்
  25. குங்குமப்பூ கலந்த பால் 1/2 கப்
  26. உப்பு தேவையான அளவு
  27. தண்ணீர் சமைக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து நீரை வடித்துக்கொள்ளுங்கள்.
  2. சிக்கெனோடு தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள், சோம்பு தூள், கரம் மசாலா, சிறிது கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்றாக பிசைந்து ஊற விடவும்.
  3. அரிசியை கழுவி, நீர் விட்டு ஊற வையுங்கள்.
  4. சிக்கன், அரிசி ஊறும் நேரத்தில், வெங்காயம், தக்காளி நறுக்கி கொள்ளுங்கள்.
  5. தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
  6. இரண்டு பர்னரில், ஒரு பக்கம் குக்கர், இன்னொரு பக்கம் ஒரு பாத்திரத்தில் நீர் முக்கால் பாகம் நிரப்பி கொதிகவிடுங்கள்.
  7. அரிசி சமைக்கும் அளவு பாத்திரம், நீர் அளவு சற்று கூடுதலாக இருக்க வேண்டும்.
  8. இப்போது, நீரில் பட்டை, லவங்கம், கிராம்பு, ஜாதி பத்திரி,அன்னாசி பூ, ஏலக்காய், சீரகம், சோம்பு, பிரிஞ்சி இலை, மிளகாய் தூள், மல்லி தூள், கொத்துமல்லி, புதினா, உப்பு , பச்சை மிளகாயை உடைத்து போடுங்கள். நீர் நன்றாக கொதிகட்டும்.
  9. இப்போது குக்கரில், எண்ணெய் ஊற்றி, உப்பு, சீரகம், சோம்பு தவிர மேலே நீரில் போட்ட அனைத்திலும் மீதம் உள்ளதை சேர்த்து நன்றாக பொரிய விடுங்கள்.
  10. பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்குங்கள்.
  11. வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அடிப்பிடிக்காமல், பச்சை வாசனை போக வதக்குங்கள்.
  12. அரிசிக்காக கொதிக்கும் நீரிலும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கொள்ளுங்கள்.
  13. இப்போது குக்கரில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்குங்கள்.
  14. தக்காளி குழைந்ததும், ஊறவைத்த சிக்கனை சேர்த்து, வெங்காயம் தக்காளி மசாலா சேர கிளறி மிதமான தீயில் மூடி வையுங்கள்.
  15. சிக்கன் நீர் விடும் வரை அவ்வப்போது கிளறி விடுங்கள்.
  16. இப்போது அடுத்த பர்னரில் நீர் நன்றாக கொதித்து, நாம் போட்ட பொருட்களின் சாறு நீரில் இறங்கியிருக்கும்.
  17. இப்போது நீரில் போட்டு அனைத்தையும் கவனமாக ஒரு சாரணி அல்லது ஓட்டை உள்ள கரண்டி, அல்லது பெரிய வடிகட்டியின் உதவியோடு எடுத்து விடுங்கள்.
  18. கவனம் தேவை ஏனெனில் நீர் கொதித்து கொண்டிருக்கும், சிம்மரில் வைத்துவிட்டு எடுங்கள்.
  19. மீண்டும் தீயை உயர்த்தி, ஊறவைத்த அரிசியை போட்டு கொதிக்க விடுங்கள். மூடி போட வேண்டாம்.
  20. சிக்கன் நீர் விட்டதும் 1 அல்லது 2 விசில் வரை வேகவைத்து, ஆவி இறங்கியதும், குக்கரை திறந்து மீண்டும் தீயை குறைத்து ஒரு டம்ப்ளேர் நீர் சேர்த்து கொதிக்கவிடுங்கள்.
  21. அரிசி அறைவேக்காடு வெந்ததும், எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி விடுங்கள்.
  22. நீர் நிறைய இருக்க வேண்டும், 1 கப் அரிசிக்கு குறைந்தது 4 அல்லது 5 கப் நீர் விடுங்கள்.
  23. அரிசி முக்கால் பதம் வெந்ததும், சிக்கன் கலவை உள்ள குக்கரில் லேயர் லேயேறாக வடிக்கட்டி கரண்டி அல்லது சாரணியில் நீரை வடித்து அரிசியை அழுத்தம் தராமல் பரப்பி விடுங்கள்.
  24. மேலே நறுக்கிய புதினா கொத்துமல்லி தூவுங்கள். குங்குமப்பூ பால் அல்லது கலர் நீரை வட்டமாக ஊற்றிவிடுங்கள்.
  25. 1/2 குழிகரண்டி எண்ணெய் அல்லது நெய் பரவலாக ஊற்றிவிடுங்கள்.
  26. விசிலுடன் குக்கரை மூடி, ஒரு தவா மீது வைத்து, முழு தீயில் 10நிமிடமும், குறைவான தீயில் 15 நிமிடமும் வைத்து சமைத்து இறக்குங்கள்.
  27. இதனை 10 அல்லது 15 நிமிடம் செட் ஆக விட்டு, மூடியை திறந்து, சாதம் உடையாமல் கிளறி பரிமாறுங்கள்.
  28. பெட்டர் பட்டர் தமிழ் குழுமத்தின் ஆண்டு விழா கொண்டாட்டத்தை, சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் தம் பிரியாணி, பச்சடி, பொரித்த கோழியுடன் கலக்கலாக கொண்டாடுங்கள்.
  29. இதே முறையில் மட்டன் பிரியாணி செய்யலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்