வீடு / சமையல் குறிப்பு / க்ரீமீ சாலட்

Photo of Creamy Salad by Zainab Fazeela at BetterButter
457
3
0.0(0)
0

க்ரீமீ சாலட்

Jul-20-2018
Zainab Fazeela
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

க்ரீமீ சாலட் செய்முறை பற்றி

ப்ரூட்ஸ் வெஜிடபிள் மயோனய்ஸ் மற்றும் ப்ரஸ் க்ரீம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. ஆப்பிள் 1 பழம்
  2. மாதுளை 1 பழம்
  3. திராட்சை (seedless) 200 கிராம்
  4. கேரட் 3 (மீடியம் அளவு)
  5. வெள்ளரிக்காய் 250 கிராம்
  6. ஸ்வீட் கார்ன் 1 (frozen corn)
  7. மிளகுதூள் தேவைக்கு
  8. ப்ரஸ் க்ரீம் 2 தே.க (optional)
  9. கார்லிக் சாஸ் தேவைக்கு
  10. கார்லிக் சாஸ் செய்ய தேவையான பொருட்கள் :
  11. முட்டை 2 (வெள்ளை கரு மட்டும்)
  12. பூண்டு 3 பல்
  13. வினிகர் 1 தே க
  14. உப்பு தேவைக்கு
  15. வெஜ் ஆயில் ½ கப்

வழிமுறைகள்

  1. காய்கறிகள் மற்றும் பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவேண்டும்
  2. கார்லிக் சாஸ் செய்வதற்கு : blender எடுத்து அதற்குள் முட்டை (வெள்ளை கரு) மற்றும் பூண்டு பல் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. பிறகு வினிகர் மற்றும் உப்பு போட்டு அடித்து கொள்ளவும் இதில் நுரை பதம் வந்ததும்
  4. கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் சேர்க்க வேண்டும் கட்டியான (creamy) பதம் வந்ததும் blender யை ஆப் செய்து கார்லிக் சாஸை தனியாக எடுத்து வைக்க வேண்டும்
  5. ஒரு பவுலில் வெட்டி வைத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை போட வேண்டும்
  6. தேவைக்கு மிளகு தூள் (இதில் பீட்ஸா ஹெர்ப்ஸான oregano மற்றும் basil Herbs உம் போடலாம்) தேவைப்பட்டால் உப்பு, ப்ரஸ் க்ரீம் மற்றும் கார்லிக் சாஸ் சேர்த்து மிக்ஸ் செய்தால்
  7. அருமையான மற்றும் சுவையான க்ரீமீ சாலட் ரெடி
  8. குறிப்பு : இதில் உங்களுக்கு தேவையான பழங்களை சேர்த்து கொள்ளலாம். (மாம்பழம் ஆரஞ்சுபழம் சாத்துக்குடி சப்போட்டா மற்றும் வாழைப்பழம்) தவிர மற்ற பழங்கள் போடலாம். அன்னாசிபழம் சேர்க்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்