வீடு / சமையல் குறிப்பு / கார்ன் தக்காளி புலாவ்

Photo of Corn Tomato Pulao by Sowmya Sundar at BetterButter
0
2
0(0)
0

கார்ன் தக்காளி புலாவ்

Jul-21-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கார்ன் தக்காளி புலாவ் செய்முறை பற்றி

ஸ்வீட் கார்ன் மற்றும் தக்காளி விழுது சேர்த்து செய்த புலாவ். ஒரே குக்கரில் செய்யும் சுலபமான ஒன் பாட் மீல் இது.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • భారతీయ
  • ప్రెజర్ కుక్
  • మిళితం
  • ప్రధాన వంటకం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி- 1 1/2 கப்
  2. தண்ணீர்- 2 1/4 கப்
  3. ஸ்வீட் கார்ன்-1/2 கப்
  4. பெரிய வெங்காயம்-1 நறுக்கியது
  5. தக்காளி-3
  6. பச்சை மிளகாய்-2
  7. இஞ்சி -1 துண்டு
  8. பூண்டு-2 பல்
  9. நெய்-1 டேபிள் ஸ்பூன்
  10. எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  11. சீரகம்-1 டீஸ்பூன்
  12. பட்டை -1 துண்டு
  13. கிராம்பு-2
  14. ஏலக்காய்-2
  15. பிரிஞ்சி இலை -1
  16. மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
  17. கரம் மசாலா தூள்- 1/2 டீஸ்பூன்
  18. சர்க்கரை-1/4 டீஸ்பூன்
  19. உப்பு தேவையான அளவு
  20. கொத்தமல்லி தழை- சிறிது

வழிமுறைகள்

  1. குக்கரில் நெய் ,எண்ணெய் விட்டு சீரகம், ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை தாளித்து கொட்டி வெங்காயம், கார்ன் ,பச்சை மிளகாய்,உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  2. தக்காளி ,இஞ்சி ,பூண்டு, ஒரு பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  3. இரண்டு நிமிடங்கள் வதங்கியதும் தக்காளி விழுது, சர்க்கரை, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் அதனுடன் ஊற வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து தண்ணீர் விட்டு குக்கரை மூடி மிதமான தீயில் இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்
  5. கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்