வீடு / சமையல் குறிப்பு / ரெட் வெல்வெட் சீஸ் கேக்

Photo of Red velvet cheesecake by Apsara Fareej at BetterButter
511
3
0.0(0)
0

ரெட் வெல்வெட் சீஸ் கேக்

Jul-21-2018
Apsara Fareej
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ரெட் வெல்வெட் சீஸ் கேக் செய்முறை பற்றி

இந்த கேக் செய்வது மிகவும் சுலபம். பார்ட்டிகளுக்கு செய்து வைக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • ஜப்பானிய
  • பேக்கிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மைதா - 3/4 கப்
  2. பொடித்த சீனி - 1 கப் + 3 1/2 மேசைக்கரண்டி
  3. வெண்ணெய்( உப்பில்லாதது) - 1/2 கப்
  4. கொகோ பவுடர் - 3 1/2 மேசைக்கரண்டி
  5. முட்டை - 3
  6. க்ரீம் சீஸ் - 125 கிராம்(4.5 oz)
  7. ஆப்பிள் சிடார் வினிகர் (அ) வொய்ட் வினிகர் - 2 தேக்கரண்டி
  8. உப்பு - 1/4 தேக்கரண்டி
  9. வெனிலா எஸன்ஸ் - 1 + 1 தேக்கரண்டி
  10. ரெட் ஃபுட் கலர் லிக்யூட் - 1 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் வெண்ணெய், க்ரீம் சீஸ், முட்டை இவைகளை ஃப்ரிட்ஜிலிருந்து அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே எடுத்து வைத்து விடவும். பொருட்கள் ரூம் டெம்பரேச்சரில் இருப்பது மிகவும் முக்கியமானது. 8 இன்ச் கேக் தட்டை வெண்ணை தடவியோ, பட்டர் பேப்பர் போட்டோ தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
  2. வெண்ணையையும், ஒரு கப் பொடித்த சீனியையும் ஒரு பாத்திரத்தில் போட்டு எலக்ட்ரிக் பீட்டராலோ அல்லது சாதாரண விஸ்க்காலோ நன்கு ஒன்று சேர கலக்க வேண்டும்.
  3. வெள்ளை கலராக ஒன்று சேர்ந்து கலந்ததும், அதில் 2 முட்டையை உடைத்து நன்கு சாஃப்ட்டாகவும், க்ரீம் பதத்திற்கு வரும் வரை அடிக்கவும். அதன் பின் அதில் வெனிலா எஸன்ஸ், கலர், வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. பிறகு மைதா, கொகோ பவுடரை சலித்து அதில் சேர்த்து, உப்பும் சேர்த்து நன்கு அடித்து கலக்கி வைக்கவும்.
  5. மற்ற்மொரு பாத்திரத்தில் க்ரீம் சீஸ், பொடித்த சீனி 3 1/2 மேசைக்கரண்டி,1 முட்டை சேர்த்து நன்கு ஒன்று சேர கட்டியில்லாமல் மிருவாகும் வரை அடித்து வைத்து கொள்ளவும்.
  6. இப்போது ஓவனை 180 டிகிரி முற்சூடு செய்ய செய்து விட்டு, பேக்கிங் தட்டில் பாதி கொக்கோ கலவையில் பாதியை ஊற்றி பரவலாக பரத்தவும். பின்பு அதன் மேல் க்ரீம் சீஸ் கலவையில் பாதியை ஆங்காங்கே ஸ்பூனால் ஊற்றி ஒரு குச்சியால் லேசாக கலந்து விடவும். ( ரொம்பவும் கலக்க கூடாது)
  7. அதற்கு மேல் மீதி கொக்கோ கலவையும் பரவலாக ஊற்றி , பின் க்ரீம்சீஸ் கலவையை அதே போல் ஆங்காங்கே ஊற்றி படத்தில் உள்ளது போன்று குச்சியால் லேசாக கலந்து விட்டு ட்ரேயை நன்கு தட்டி விட்டு, முற்சூடு செய்த ஓவனில் 30 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும்.
  8. ஒவ்வொரு ஓவனிலும் பேக் செய்யும் நேரங்கள் மாறுபடலாம். எனவே 25 நிமிடங்களுக்கு பிறகு வெளியே எடுத்து குச்சியை நடுவில் குத்தி பார்த்து ஒட்டாமல் வந்திருந்தால் ஓவனை நிறுத்தி கேக்கை ஆற விடவும். இல்லையென்றால் தொடர்ந்து பேக் செய்யவும்.
  9. சுவையான, வெல்வெட் போன்று மிருதுவான கேக் தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்