பேக்கின் இல்லாத மாதுளை மசிப்பு டார்ட் | No bake pomegranate mousse tart in Tamil

எழுதியவர் Flours Frostings  |  1st Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of No bake pomegranate mousse tart by Flours Frostings at BetterButter
பேக்கின் இல்லாத மாதுளை மசிப்பு டார்ட்Flours Frostings
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  0

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  12

  மக்கள்

420

0

பேக்கின் இல்லாத மாதுளை மசிப்பு டார்ட் recipe

பேக்கின் இல்லாத மாதுளை மசிப்பு டார்ட் தேவையான பொருட்கள் ( Ingredients to make No bake pomegranate mousse tart in Tamil )

 • அடித்தளத்திற்கு: 100 கிராம் (அல்லது 1/2 கப் நசுக்கியது) செரிமான பிஸ்கெட்டுகள்
 • 50 கிராம் அல்லது அந்தளவிற்கு 1/4 உப்பிடப்படாத வெண்ணெய்
 • மசிப்பு பூரணத்திற்கு: 2-3 மாதுளை (1 1/2 கப் ஜூசுக்குப் போதுமானது)
 • 100 கிராம் அல்லது 1/2 கப் சர்க்கரை
 • 10 கிராம் அல்லது 1 தேக்கரண்டி ஜெலட்டின்
 • 3 தேக்கரண்டி குளிர்ந்த நீர்
 • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 • 1 கப் கெட்டியான அல்லது அடிக்கப்பட்டக் கிரீம்

பேக்கின் இல்லாத மாதுளை மசிப்பு டார்ட் செய்வது எப்படி | How to make No bake pomegranate mousse tart in Tamil

 1. 8 அல்லது 9 இன் வட்டவடிவ பாத்திரத்தில் பிளாஸ்டிக் தாளால் லைன் செய்துகொள்ளவும். உறையானது பதத்திரத்தின் பக்கங்களுக்கு மேலா இருக்கவேண்டும். மாற்றாக ஒரு ஸ்பிரிங்பார்ம் பாத்திரம் அல்லது மசிப்பு வளையத்தை மென்மையான பக்கங்களுக்காகப் பயனப்டுத்தலாம்.
 2. அடித்தளத்தை தயாரிப்பதற்காக, வெண்ணெயை உருக்கி, பிஸ்கெட்டுகளை நசுக்கிக்கொள்ளவும். நன்றாகக் கலந்து பாத்திரத்தின் அடியில் அழுத்தவும்.
 3. 30 நிமிடங்களுக்கு குளிர்விக்கவும் அல்லது உங்கள் மசிப்புத் தயாராகும்வரை.
 4. ஜெலடினை ஒரு சிறிய பாத்திரத்தில் உள்ள குளிர்ந்த நீரில் தூவி எடுத்து வைக்கவும்.
 5. உங்கள் மிக்சரில் அல்லது உணவு புராசசரில் மாதுளை விதைகளை நன்றாக அடித்துக்கொள்ளவும்.
 6. சாஸ் பாத்திரத்தில் வடிக்கட்டி (குருணைத் தள்மையை நீக்குவதற்காக) சர்க்கரையைச் சேர்க்கவும். கொப்புளிக்கும்வரை சிறு தீயில் சூடுபடுத்தவும்.
 7. அடுப்பிலிருந்து எடுத்த எலுமிச்சை சாறு, ஜெலட்டின் கலவையைச் சேர்க்கவும். அனைத்து ஜெலடினும் கரையும்வரை கலந்துகொள்ளவும். விரும்பினால் மீண்டும் வடிக்கட்டிக்கொள்ளலாம். அறையின் வெப்பத்திற்கு வரட்டும். ஜெல்லியாக மாறுவதை உணர்ந்தால் இடையிடையே கலக்கிக்கொள்ளலாம்.
 8. கிரீமை ஒரு மென்மையான கூம்பாக அடித்துக்கொள்ளவும்.
 9. மாதுளைக் கலவையில் மென்மையாகும்வரை கிரீமை பிறட்டிக்கொள்ளவும்.
 10. உங்களது குளிர்ந்த அடித்தளத்தில் ஊற்றி மேல் பகுதியை மென்மையாக்கவும். 6 மணி நேரத்திற்கு அல்லது இரவு முழுவதும் குளிர்விக்கவும். தயாரானதும் பரிமாறவும், சற்றே பிளாஸ்டிக் உறையைத் தூக்கி (மசிப்பு வளையம் / ஸ்பிரிங்பார்ம் பாத்திரத்தை வெளியில் எடுக்கப் பயன்படுத்தினால்) பரிமாறும் தட்டிற்கு டார்ட்டை இடம் மாற்றவும்.

எனது டிப்:

உங்களுக்கு துடிப்பான நிறம் தேவைப்பட்டால், ஒன்றல்லது இரண்டு துளிகள் பிங்க்/சிவப்பு ஜெல் உணவு நிறமி சேர்க்கவும்.

Reviews for No bake pomegranate mousse tart in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.