வீடு / சமையல் குறிப்பு / முழு அசைவ உணவு

Photo of Full Non Veg Lunch by Menaga Sathia at BetterButter
482
3
0.0(0)
0

முழு அசைவ உணவு

Jul-21-2018
Menaga Sathia
50 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முழு அசைவ உணவு செய்முறை பற்றி

நமது குழுவின் முதலாமாண்டு ஸ்பெஷலாக இந்த அசைவ உணவை சமர்ப்பிக்கிறேன்...குழுமத்திற்கு அன்பான வாழ்த்துக்கள்!! சாதம்,சிக்கன் குழம்பு,சிக்கன் வறுவல்,மீன் குழம்பு,மீன் வறுவல்,கருவாட்டு குழம்பு,அவித்த முட்டை,இனிப்பு பிடி கொழுக்கட்டை என செய்துள்ளேன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1.இனிப்பு பிடிகொழுக்கட்டை செய்ய :
  2. அரிசி மாவு -1/2 கப்
  3. நீர் -1 கப்
  4. துருவிய வெல்லம் -1/4 கப்+1 டேபிள்ஸ்பூன்
  5. ஏலக்காய்தூள் -1/8 டீஸ்பூன்
  6. பொடியாக நறுக்கிய தேங்காய்பல் -2 டேபிள்ஸ்பூன்
  7. 2.கருவாட்டு குழம்பு செய்ய:
  8. புளி கரைசல் -2 கப்
  9. உப்பு - தேவைக்கு
  10. நல்லெண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
  11. கருவாடு - 6 மீன்கள்
  12. பிடிகருணை -4( வேகவைத்து,தோலுரித்தது)
  13. குழம்புதூள் -2 டேபிள்ஸ்பூன்
  14. சாம்பார்பொடி -1 டேபிள்ஸ்பூன்
  15. பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
  16. தக்காளி -1,நறுக்கியது
  17. குழம்பு வடகம் -2 டீஸ்பூன்
  18. கறிவேப்பிலை -1 ஈர்க்கு
  19. 3.மீன் குழம்பு செய்ய:
  20. மத்திமீன் -1/4 கிலோ,சுத்தம் செய்தது
  21. புளிகரைசல் -2 கப்
  22. தக்காளி -1,நறுக்கியது
  23. கீறிய பச்சைமிளகாய் -2
  24. உப்பு - தேவைக்கு
  25. குழம்புதூள் -2 டேபிள்பூன்
  26. சாம்பார்பொடி -1 டேபிள்ஸ்பூன்
  27. மாங்காய்துண்டுகள் -4
  28. குழம்பு வடகம் -2 டீஸ்பூன்
  29. நல்லெண்ணய் -3 டீஸ்பூன்
  30. வெந்தயம் -1/2 டீஸ்பூன்
  31. நசுக்கி கொள்ள:
  32. சின்ன வெங்காயம் -5
  33. பூண்டுப்பல் -4
  34. கறிவேப்பிலை -1 ஈர்க்கு
  35. சீரகம் -1 டீஸ்பூன்
  36. 4.மீன் வறுவல் செய்ய:
  37. மீன் துண்டுகள் -4,சுத்தம் செய்தது
  38. உப்பு - தேவைக்கு
  39. வரமிளகாய்தூள் -2 டேபிள்ஸ்பூன்
  40. சோம்புதூள் -1/2 டீஸ்பூன்
  41. புளிபேஸ்ட் -1 டீஸ்பூன்
  42. இஞ்சிபூண்டு விழுது -1/2 டீஸ்பூன்
  43. எண்ணெய் - வறுக்க தேவையான அளவு
  44. 5.சிக்கன் குழம்பு
  45. சிக்கன் -1 கிலோ,சுத்தம் செய்து,துண்டுகளாகியது
  46. வெங்காயம் -2,நறுக்கியது
  47. தக்காளி -2,நறுக்கியது
  48. வரமிளகாய்தூள் -2 டேபிள்ஸ்பூன்
  49. தனியாதூள் -1 டேபிள்ஸ்பூன்
  50. உப்பு,எண்ணெய் - தேவைக்கு
  51. இஞ்சிபூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
  52. தாளிக்க:
  53. கிராம்பு -4
  54. பிரிஞ்சி இலை -2
  55. ஏலக்காய் -2
  56. பட்டை -1 துண்டு
  57. அரைக்க:
  58. தேங்காய்துறுவல் -1/4 கப்
  59. சோம்பு -1 டீஸ்பூன்
  60. 6.சிக்கன் வறுவல் செய்ய
  61. குழம்பிலிருந்து கொஞ்சம் வெந்த சிக்கன் - 1 நடுத்தர கிண்ணம் அளவு
  62. எண்ணெய் -2 டீஸ்பூன்
  63. கறிவேப்பிலை -1 ஈர்க்கு
  64. காய்ந்தமிளகாய் -2
  65. உப்பு -தேவைக்கு
  66. சோம்பு -1 டீஸ்பூன்
  67. வரமிளகாய்தூள் -1 டேபிள்ஸ்பூன்
  68. சிக்கன் குழம்பு -2 குழிகரண்டி
  69. 7.சாதம் செய்ய
  70. புழுங்கல் அரிசி -2 கப்
  71. நீர் -4 கப்
  72. முட்டை -4

வழிமுறைகள்

  1. 1.கொழுக்கட்டை செய்ய : பாத்திரத்தில் வெல்லம்,நீர் ,தேங்காய்பல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
  2. அரிசிமாவை கொட்டி கிளறி,கெட்டியாக வரும் போது இறக்கி ஆறவைக்கவும்.
  3. பின் நல்லெண்ணய் தொட்டு பிசைந்து கொழுக்கட்டை களாக செய்து ஆவியில் 5-6 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.
  4. 2. கருவாட்டு குழம்பு : புளிகரைசலில்,உப்பு,குழம்புதூள், சாம்பார்பொடி சேர்த்து கரைத்து வைக்கவும்.கருவாட்டினை சுத்தம் செய்து வைக்கவும்.
  5. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வடகம் சேர்த்து தாளித்து வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கி புளிகரைசலை ஊற்றி. கொதிக்கவிடவும்.
  6. அப்படியே அதில் முட்டையை கழுவி போட்டு வேகவிடவும்.
  7. பச்சை வாசனை அடங்கியதும் முட்டையை எடுக்கவும்.பின் கருவாடு,துண்டுகளாகிய பிடிகருணை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும்.
  8. 3.மீன் குழம்பு: புளிகரைசலில் உப்பு,சாம்பார்பொடி, குழம்புதூள் சேர்த்து கரைத்து வைக்கவும்.நசுக்க கொடுத்துள்ள பொருட்களை நசுக்கவும்.
  9. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெந்தயம்,வடகம் சேர்த்து தாளித்து நசுக்கிய பொருட்கள்,தக்காளி,கீறிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  10. பின் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவைத்து பச்சை வாசனை அடங்கியதும் மாங்காய்துண்டுகள்,மீன் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
  11. 4: மீன் வறுவல் : மீனில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களை கலந்து எண்னெயில் இருபக்கமும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
  12. 5: சிக்கன் குழம்பு : அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மைய அரைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்
  13. பின் வெங்காயம்,தக்காளி, இஞ்சிபூண்டு விழுது என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கிய பின் சிக்கனை சேர்த்து வதக்கவும்
  14. பின் தூள்வகைகள் சேர்த்து மேலும் வதக்கி தேவைக்கு நீர் ஊற்றி வ்ரெகவிடவும்,வெந்ததும் தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
  15. 6:சிக்கன் வறுவல்: கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை,சோம்பு, காய்ந்தமிளகாய், வரமிளகாய்தூள் சேர்த்து தாளித்து வேகவைத்த சிக்கன்,மற்றும் குழம்பு சேர்க்கவும்
  16. தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு சுருள கிளறி இறக்கவும்.
  17. 7:சாதம் செய்ய: அரிசியை கழுவி குக்கரில்,நீர் ஊற்றி 3 விசில்வரை வேகவைக்கவும்.
  18. முட்டையை தோலெடுக்கவும்.
  19. தட்டில் சாதம்,முட்டை,மீன் வறுவல்,கருவாட்டு குழம்பு,மீன் குழம்பு,வறுவல், சிக்கன் குழம்பு, வறுவல், கொழுக்கட்டை வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்