Photo of Jangri by Raihanathus Sahdhiyya at BetterButter
805
5
0.0(0)
0

ஜாங்கிரி

Jul-21-2018
Raihanathus Sahdhiyya
270 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ஜாங்கிரி செய்முறை பற்றி

ஜாங்கிரி அனைத்து மக்களாலும் மிகவும் விரும்பக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும். இது முகலாயர்களால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. இது உளுந்தை கொண்டு செய்வதால் மிகவும் சத்தானதும் கூட

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • பார்சி
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. உளுந்து 1 கப்
  2. சர்க்கரை ஒரு கப்
  3. தண்ணீர் ஒரு கப்
  4. அரிசி மாவு ஒரு மேசைக்கரண்டி
  5. உப்பு அரை தேக்கரண்டி
  6. கேசரி கலர் பவுடர் அல்லது மஞ்சள் தூள் தேவைக்கேற்ப
  7. எண்ணெய் அல்லது நெய் :ஜாங்கிரி பொறிக்க
  8. ரோஸ் எசன்ஸ் 1/4 தேக்கரண்டி
  9. எலுமிச்சை சாறு 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் உளுந்தை நன்றாக கழுவி 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்
  2. அடுத்ததாக ஊறவைத்த அந்த தண்ணீரை வடித்து, உளுந்தை கிரைண்டரில் போட்டு அரைக்கவேண்டும் இடையில் தேவைக்கேற்ற அளவு சிறிது நீர் மட்டும் சேர்க்கவும்
  3. உளுந்தை நன்றாக பொதுபொதுவென்று அரைக்க வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து உளுந்த மாவை சிறிதளவு போட வேண்டும். உளுந்த மாவு தண்ணீரில் மிதந்தால் பதம் கிடைத்து விட்டது என்று அர்த்தம்
  4. அடுத்ததாக உளுந்த மாவில் அரிசி மாவு மஞ்சள் தூள் அல்லது கேசரி பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
  5. சர்க்கரை பாகு காய்ச்சவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை மற்றும் 3/4 கப் தண்ணீர் ஊற்றி ஒரு சிறு கம்பி பதம் வந்தவுடன் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் எசன்ஸ் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  6. பிறகு இந்த மாவை ஒரு பிளாஸ்டிக் பை அல்லது ஜிப் லாக் பேக்கில் போட்டு சீல் செய்து, ஓரத்தில் சிறிதாக கத்தரிக்கவும்
  7. ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி மிதமாக சூடாக்கவும். அதிகம் சூடானால் ஜாங்கிரி பிரிந்து விடும்
  8. முதலில் நடுவில் இரண்டு வட்டம் சுற்றி அதில் சிறு சிறு வட்டங்களாக ஜாங்கிரியை சுடவும்
  9. இரண்டு பக்கமும் பொரித்து எடுத்து சர்க்கரை பாகில் 2 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்