முட்டையில்லாத உருக்கிய லாவா கேக் | Eggless Molten Lava Cake in Tamil

எழுதியவர் Binjal Pandya  |  1st Jun 2016  |  
4 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Eggless Molten Lava Cake by Binjal Pandya at BetterButter
முட்டையில்லாத உருக்கிய லாவா கேக்Binjal Pandya
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  2

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  1

  மக்கள்

2161

1

Video for key ingredients

 • Homemade Peanut Butter

முட்டையில்லாத உருக்கிய லாவா கேக் recipe

முட்டையில்லாத உருக்கிய லாவா கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Eggless Molten Lava Cake in Tamil )

 • ¼ கப் மைதா
 • ¼ கப் பொடியாக்கப்பட்ட சர்க்கரை
 • 1-2 தேக்கரண்டி கொகோ பவுடர்
 • ½ தேக்கரண்டி பேக்கி்ங் பவுடர்
 • ¼ தேக்கரண்டி பேக்கிங் சோடா
 • ஒரு சிட்டிகை உப்பு
 • 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்
 • 1-2 தேக்கரண்டி எண்ணெய்/வெண்ணெய்
 • ¼ கப் பால்
 • 1-2 தேக்கரண்டி வேர்கடலை வெண்ணெய் + 1-2 சிறிய கட்டி சாக்லேட் அலலது (ரீசஸ் துண்டுகள் வேர்கடலை வெண்ணெய் சாக்லேட்)

முட்டையில்லாத உருக்கிய லாவா கேக் செய்வது எப்படி | How to make Eggless Molten Lava Cake in Tamil

 1. மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, கொகோ பவுடர் ஆகியவற்றை கலவைப் பாத்திரத்தில் நன்றாகச் சலித்துக்கொள்ளவும்.
 2. மெதுவாகப் பாலைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
 3. எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலந்து ஒரு நீர்மத் தன்மையிலான மாவைத் தயாரித்துக்கொள்க (தேவைப்பட்டால் அதிகம் பாலைச் சேர்த்துக்கொள்ளவும்)
 4. இப்போது மைக்ரோவேவில் பயன்படுத்தக்கூடிய அச்சை எண்ணெய் தடவி (கிளாஸ் அல்லது பிளாஸ்டிக்), தயாரித்து வைத்துள்ள மாவை ஊற்றி அச்சை நிரப்பி வேர்கடலை வெண்ணெய்+சாக்லேட்டை மையத்தில் வைக்கவும்.
 5. நிரப்பிய அச்சை மை்கரோவேவ்வில் வைத்து உயர் தீயில் 1.5-2 நிமிடங்கள் பேக்செய்யவும்.
 6. மைக்ரோவேவில் இருந்து எடுத்து 2 நிமிடங்கள் ஆறவிடவும்.
 7. ஆறியதும், பரிமாறும் தட்டிற்கு மாற்றவும். உருகிய லாவா கேக் தயார்.
 8. புதிதாக அல்லது ஐஸ்கிரீமுடன் அதைப் பரிமாறி அந்தக் கணத்தை அனுபவிக்கவும்.

எனது டிப்:

பாதாம் அல்லது முந்திரி பாலை வேகன் லாவா கேக்கிற்கு நீங்கள் பயன்படுத்தலாம். கேட்பரி, ஹெர்ஷே, இன்னபிற போன்ற மென்மையானது எதைவேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்.

Reviews for Eggless Molten Lava Cake in tamil (1)

Reshma Reshma2 years ago

Kk
Reply