வீடு / சமையல் குறிப்பு / கணவாய் மீன் தொக்கு

Photo of Squid masala by Jayanthi kadhir at BetterButter
649
2
0.0(0)
0

கணவாய் மீன் தொக்கு

Jul-23-2018
Jayanthi kadhir
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கணவாய் மீன் தொக்கு செய்முறை பற்றி

கணவாய் மீனின் ருசி இறால் போலவே இருக்கும் அந்த கணவாய் மீனை வைத்து சுவையான தோசை எப்படி செய்வது என்பதில் செய்முறை விளக்கம் இதோ

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஒரு கிலோ கணவாய் மீன்
  2. ஒரு டீஸ்பூன் கடுகு
  3. 3 பெரிய வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  6. 4 பச்சை மிளகாய்
  7. 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. கால் டீஸ்பூன் மஞ்சள்தூள்
  9. அரை டீஸ்பூன் மிளகு தூள்
  10. அரை டீஸ்பூன் சோம்பு தூள்
  11. கருவேப்பிலை கொத்தமல்லி
  12. உப்பு எண்ணெய் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் கணவாய் மீனை நன்கு சுத்தம் செய்து பொடியாக அரிந்து கொள்ளவும்
  2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பொடியாக அரிந்து வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. பின்னர் தக்காளி சேர்த்து நன்கு மசித்து வரும் வரை வதக்கவும்
  5. வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும் அதில் கொடுத்துள்ள மசாலா பொருட்களை சேர்க்கவும்
  6. பின்னர் அதில் அரிந்து வைத்துள்ள கணவாய் மீனை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு தட்டு போட்டு மூடி நன்கு வேக விடவும்
  7. மீன் வெந்து தொம்பதம் வந்து எண்ணெய் பிரியும் சமயம் கொத்தமல்லி கருவேப்பிலை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்