வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு

Photo of Fish kulambu by Revathi Reva at BetterButter
467
2
0.0(0)
0

மீன் குழம்பு

Jul-23-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு செய்முறை பற்றி

பொடி மீன்கள் குழம்புக்கு அதிக ருசி தரும்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஏதேனும் ஒரு வகை மீன் 1/2 கிலோ
  2. புளி 100 கிராம்
  3. வெங்காயம் 3
  4. தக்காளி 3
  5. பச்சைமிளகாய் 1
  6. குழம்பு மிளகாய்தூள் 5ஸ்பூன்
  7. உப்பு
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. புளியை 10நிமிடம் ஊற விடவும். ஊறிய புளியை தேவையான தண்ணீர் விட்டு 2அல்லது 3 முறை கரைத்து எடுத்துக்கொள்ளவும். கரைத்த புளியில் குழம்புமிளகாய்தூள், உப்பு, ஒரு கைப்பிடி வெங்காயம், ஒரு கைப்பிடி தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிது சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும்.
  2. சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு,வெந்தயம் தாளித்து மீதி வெங்காயம்,கருவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும், தக்காளி சேர்த்து வதக்கி கரைத்த புளி கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்
  3. நன்கு கொதித்து கெட்டியானதும் சிம்மில் வைத்து மீன் துண்டுகளை சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கவும். மீன் குழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்