வீடு / சமையல் குறிப்பு / குல்ஃபி மாம்பழம்

Photo of KULFI MANGO (KULFI STUFFED MANGO) by Raihanathus Sahdhiyya at BetterButter
264
6
0.0(0)
0

குல்ஃபி மாம்பழம்

Jul-24-2018
Raihanathus Sahdhiyya
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

குல்ஃபி மாம்பழம் செய்முறை பற்றி

இந்தியாவில் ரோட்டோர கடைகளில் விற்கப்படும் குல்ஃபி மாம்பழம், இப்பொழுது சுவையான மற்றும் சத்தான வகையில் வீட்டிலேயே செய்து மகிழ்ந்திட ஒரு அழகிய ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • இந்திய
  • சிம்மெரிங்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பால் அரை லிட்டர்
  2. மில்க் மெய்ட் 1/2 கப்
  3. மாம்பழம் : 3-4
  4. பொடித்த பருப்பு வகைகள் : 1/4 கப்
  5. பொடித்த ஏலக்காய் : 1/2 தேக்கரண்டி
  6. ரொஸ் எசன்ஸ் : 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் பாலை ஒரு சட்டியில் ஊற்றி கொதிக்க விடவும்
  2. பால் கொதித்து சில நிமிடங்களுக்கு பிறகு மில்க்மெய்டு அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்
  3. பால் மூன்றில் ஒரு பங்காக வற்றியவுடன் பொடித்த பருப்பு வகைகள், பொடித்த ஏலக்காய் மற்றும் ரோஸ் எசன்ஸ் ஆகியவற்றை சேர்க்கவும்
  4. இந்து குல்ஃபி கலவை நன்றாக திக்காக ஆனவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்
  5. ஒரு மாம்பழத்தை எடுத்து நன்றாக கழுவி அதன் மேற்புறத்தில் வட்டவடிவமாக கத்தியை கொண்டு நறுக்கி எடுக்கவும்
  6. பிறகு கத்தி அல்லது ஒரு ஸ்பூன் பயன்படுத்தி நடுவில் உள்ள விதையை மட்டும் கவனமுடன் எடுக்க வேண்டும்
  7. இப்பொழுது குழியாக உள்ள நடுப்பகுதியில் நாம் தயாரித்து வைத்துள்ள கலவையை ஊற்றி, வட்டமாக நறுக்கிய மேற்பகுதியை வைத்து மூடவும்.
  8. இவ்வாறு அனைத்து மாம்பழங்களையும் தயா‌ரித்து ப்ரிஜ்ஜில் 8-12 மணி நேரம் வரை உறைய வைக்கவும்
  9. பரிமாறும் சமயத்தில் மாம்பழங்களை எடுத்து தோல் சீவி விரும்பிய வடிவங்களில் வெட்டி மேலே பொடித்த பருப்பு தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்