வீடு / சமையல் குறிப்பு / டபுள் டிலைட்

Photo of Double Delight by Athilakshmi Maharajan at BetterButter
381
1
0.0(0)
0

டபுள் டிலைட்

Jul-24-2018
Athilakshmi Maharajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

டபுள் டிலைட் செய்முறை பற்றி

சாக்கலேட் வெண்ணிலா புட்டிங்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அகர் அகர் 5 கிராம்
  2. வெண்ணிலா லேயர் செய்வதற்கு
  3. ஃப்ரெஷ் க்ரீம் கால் கப்
  4. பால் அரை கப்
  5. பொடித்த சர்க்கரை கால் கப்
  6. வெனிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன்
  7. சாக்லேட் லேயர் செய்வதற்கு
  8. பால் அரை கப்
  9. ஃப்ரெஷ் க்ரீம் கால் கப்
  10. பொடித்த சர்க்கரை கால் கப்
  11. கொக்கோ பவுடர் 3 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அகர் அகர் உடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பில் வைத்து கரைக்கவும்
  2. அது நன்றாக கரைந்து தண்ணீர் பதத்திற்கு வரும் வரை கலக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் பால், பிரஷ் கிரீம், வெண்ணிலா எசன்ஸ், பொடித்த சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில் வைத்து சூடாகும் வரை கலக்கவும்
  4. இதில் பாதி அகர் அகரை ஊற்றவும்
  5. இந்தக் கலவை கெட்டியானவுடன் அதை சிறிய கப்புகளில் ஊற்றவும்
  6. இந்த கப்புகளை லேசாக சாய்த்து வைக்கவும்
  7. லேசாக சாய்த்து வைத்த கப்புகளை ஃப்ரீசரில் ஒரு மணிநேரம் வைத்து எடுக்கவும்
  8. சாக்லேட் லேயே செய்வதற்கு
  9. கொடுத்துள்ள பால், பிரஷ் கிரீம், பொடித்த சர்க்கரை மற்றும் கோகோ பவுடரை சேர்த்து நன்றாக கலக்கி பின் அடுப்பில் வைத்து மெதுவாக சூடாக்கவும்
  10. இதில் மீதி உள்ள அகர் அகரை சேர்த்து நன்றாக கலக்கவும்
  11. இந்தக் கலவை கெட்டியானவுடன் அதை வெண்ணிலா லேயர் உள்ள கப்புகளில் ஊற்றவும்
  12. மீண்டும் ஃப்ரீசரில் ஒரு மணிநேரம் வைத்து எடுக்கவும்
  13. மேலே சாக்லெட் சிப்களை தூவி அலங்கரிக்கவும்
  14. இப்பொழுது மிகவும் எளிதான டபுள் டிலைட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்