வீடு / சமையல் குறிப்பு / பாய் வீட்டு மட்டன் பிரியாணி

Photo of Muslim style Mutton Biriyani by Athilakshmi Maharajan at BetterButter
3157
3
5.0(0)
0

பாய் வீட்டு மட்டன் பிரியாணி

Jul-24-2018
Athilakshmi Maharajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாய் வீட்டு மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

பாய் வீட்டு பிரியாணி மட்டும் எப்படி வாசனையாக இருக்குது? தெரிஞ்சுக்கலாமா!!

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் அரை கிலோ
  2. பாஸ்மதி அரிசி 4 கப்
  3. பெரிய வெங்காயம் 4 பொடிதாக நறுக்கியது
  4. தக்காளி 3 பொடிதாக நறுக்கியது
  5. புதினா ஒரு கைப்பிடி அளவு
  6. கொத்தமல்லி ஒரு கட்டு
  7. பட்டை பெரியது 4
  8. ஏலக்காய் 7
  9. கிராம்பு 7
  10. பச்சை மிளகாய் 5 கீறியது
  11. நெய் 3 மேஜைக்கரண்டி
  12. என்னை 3 மேஜைக்கரண்டி
  13. பிரியாணி இலை ஒன்று
  14. இஞ்சி ஒரு விரல் அளவு
  15. பூண்டு 10 பற்கள்
  16. மிளகாய்த்தூள் 2 மேஜைக்கரண்டி
  17. தனியாத்தூள் மூன்று மேஜைக்கரண்டி
  18. தயிர் அரை கப்

வழிமுறைகள்

  1. பிரியாணி மசாலா செய்வதற்கு
  2. கொடுத்துள்ள பட்டை கிராம்பு ஏலக்காய் ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வாணலியில் வறுக்கவும்
  3. அவற்றை மிக்ஸியில் நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும்
  4. கொடுத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டை நன்றாக நீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்
  5. ஒரு குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கழுவிய மட்டனைப் போட்டு உப்பு மற்றும் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றவும்
  6. அதில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து குக்கரை மூடவும்
  7. மட்டன் 6 விசில் விட்டு நன்றாக வேக வைக்கவும்
  8. மட்டன் வெந்தவுடன் மட்டனை தனியாகவும் அந்த வெந்த தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  9. பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்
  10. ஒரு குக்கரில் எண்ணெய் சிறிதளவு, கொடுத்துள நெய், பிரியாணி இலை போட்டு நன்றாக வதக்கவும்
  11. இதில் நீளமாக மெலிதாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்
  12. இதில் கீறிய பச்சை மிளகாய் களை போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்
  13. வெங்காயம் பொன்னிறமானவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  14. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை போட்டு நன்றாக வதக்கவும்
  15. நறுக்கிய தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும்
  16. இதில் மிளகாய்த்தூள் தனியாத்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலாவை சேர்க்கவும்
  17. இதில் அரை கப் தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும்
  18. வெந்து தனியாக எடுத்து வைத்துள்ள மட்டன் துண்டுகளை இதில் சேர்க்கவும்
  19. மட்டன் துண்டுகளை நன்றாக வதங்கியவுடன் அதில் மட்டன் வெந்து உள்ள தண்ணியை அதில் சேர்க்கவும்
  20. இதில் தண்ணீரின் அளவு ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர்
  21. 4 கப் அரிசிக்கு 6 கப் தண்ணீரை ஊற்ற வேண்டும்
  22. ஆறு கப் தண்ணீர் என்பது அரை கப் தயிர் + மட்டன் வெந்து தண்ணீர் + வெறும் தண்ணீர்
  23. ஊறவைத்த பாஸ்மதி அரிசியை போட்டு நன்றாக கிளறவும் தேவையான உப்பு சேர்க்கவும்
  24. தண்ணீர் நன்றாக கொதித்த உடன் மிதமான தீயில் வைத்து குக்கரை மூடி விசில் போடவும்
  25. மிதமான தீயில் சரியாக 12 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்
  26. குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் திறந்து பிரியாணியை பரிமாறவும்
  27. பாய் வீட்டு மட்டன் பிரியாணி தயார் சுவைக்க நீங்கள் தயாரா

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்