வீடு / சமையல் குறிப்பு / ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி

Photo of Special chicken briyani by Revathi Reva at BetterButter
348
3
0.0(0)
0

ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி

Jul-24-2018
Revathi Reva
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

சிறு மாற்றம் செய்த சிக்கன் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரியாணி அரிசி 2 கப்
  2. சிக்கன் 1/2 கிலோ
  3. வெங்காயம் 3
  4. தக்காளி 3
  5. பச்சைமிளகாய் 5
  6. இஞ்சிபூண்டு விழுது 3ஸ்பூன்
  7. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  8. கரம்மசாலா 1ஸ்பூன்
  9. பிரியாணி மசாலா தூள் 1ஸ்பூன்
  10. புதினா, கொத்தமல்லி அரைகட்டு
  11. பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 4
  12. எலுமிச்சை 1
  13. சிக்கன் 65 பொடி
  14. தயிர் 1+1/2 கப்
  15. உப்பு
  16. எண்ணெய்
  17. முட்டை 4
  18. மிளகுதூள் 1/2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முட்டையை மிளகுதூள்,உப்பு சேர்த்து பொரித்து எடுக்கவும்.சிக்கனை தோல், எலும்பு உள்ளதை தனியாக வைத்து விட்டு மீதி சிக்கனில் 65 பொடி, தயிர் எலுமிச்சை சேர்த்து ஊற வைத்து பொரித்து எடுக்கவும்.
  2. பிரியாணி சட்டியில் சிக்கன் பொரித்த எண்ணெய் விட்டு (விருப்பமெனில்) தாளிக்கும் பொருட்கள் சேர்த்து வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, புதினா கொத்தமல்லி பாதி அளவு சேர்த்து வதக்கவும். இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும். பச்சைவாசம் அடங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. வதங்கியதும் சிக்கன், தயிர் சேர்த்து வதக்கவும். தூள் வகைகளை சேர்த்து வதக்க்கவும். மூடி சிறிது நேரம் வேக விடவும்.
  4. 2 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும், 10 நிமிடம் ஊற வைத்த அரிசியை சேர்க்கவும். 5நிமிடம் முழு தீயில் மூடி வேக விடவும். பின் ஒரு முறை திறந்து கிளறி புதினா, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை பிழிந்து பொரித்த சிக்கன், முட்டை சேர்த்து கருவேப்பிலை பொரித்து சேர்க்கவும். மூடி 10நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
  5. தம் அடங்கியதும் திறந்து கலந்து பரிமாறவும் சுவையான ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்