வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் லாவா கேக்

Photo of Choco lava cake by Athilakshmi Maharajan at BetterButter
0
0
0(0)
0

சாக்லேட் லாவா கேக்

Jul-25-2018
Athilakshmi Maharajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் லாவா கேக் செய்முறை பற்றி

உணவகங்களில் கிடைக்கும் சாக்லேட் கேக் எப்படி செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • అమెరికన్
  • బేకింగ్
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா அரை கப்
  2. பொடித்த சர்க்கரை அரை கப்
  3. கொக்கோ பவுடர் 4 டேபிள்ஸ்பூன்
  4. டைரி மில்க் சாக்லெட் 100 கிராம்
  5. பால் முக்கால் கப்
  6. பேக்கிங் பவுடர் அரை டீஸ்பூன்
  7. வெண்ணை 4 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்
  2. ஒரு பவுலில் டைரி மில்க் சாக்லெட்டை எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. டபுள் பாய்லின் முறையில் அந்த சாக்லெட்டை உருக்கவும்
  4. அதாவது தண்ணீர் கொதிக்கும் பாத்திரத்தின் மேல் சாக்லேட் வைத்துள்ள பவுலை வைத்து சாக்லெட்டை உருக்கவும்
  5. சாக்லேட் உருகும் போது அதில் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்
  6. இதை தனியாக எடுத்து வைக்கவும்
  7. ஓவனை 185°C - 10 நிமிடங்களுக்கு ப்ரீஹீட் செய்யவும்
  8. ஒரு பௌலில் மைதா பொடித்த சர்க்கரை கொக்கோ பவுடர் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சல்லடை மூலம் நன்கு கலந்து எடுக்கவும்
  9. கொடுத்துள்ள பாலில் பாதியை ஊற்றி நன்றாக கலந்து விடவும்
  10. இந்தக் கலவையில் செய்து வைத்துள்ள சாக்லேட் வெண்ணை கலவையை கலந்து விடவும்
  11. நன்கு கலந்தவுடன் மீதி இருக்கும் பாலை அதில் சேர்க்கவும்
  12. பாலை ஊற்றி நன்றாக கலந்து விடவும்
  13. இந்தக் கலவையை சின்ன சின்ன சிலிகான் கப்புகளில் ஊற்றி வைக்கவும்
  14. இந்த கப்புகளை ப்ரீஹீட் செய்த ஓவனில் 12 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்
  15. இப்பொழுது டாமினோஸ் உணவகங்களில் கிடைக்கும் சாக்லேட் லாவா கேக் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்