BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பேஷன் ப்ரூட் பேரிட்சை காரட் கேக்

Photo of Passion fruit dates carrot cake by Fathima Beevi at BetterButter
0
2
0(0)
0

பேஷன் ப்ரூட் பேரிட்சை காரட் கேக்

Jul-25-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பேஷன் ப்ரூட் பேரிட்சை காரட் கேக் செய்முறை பற்றி

பேஷன் ப்ரூட் பேரிட்சை காரட் கேக்  (செய்முறை குக்கரில்)

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • బేకింగ్
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பட்டர் - 50 கிராம்- உருக்கியது
  2. கோதுமை மாவு - 3/4 கப்
  3. பேஷன் ப்ரூட் சாறு- 1/2 கப் - 4 பழங்களில் இருந்து எடுக்கப்பட்டது
  4. வெண்ணிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
  5. காரட்-2- நன்கு துருவிக் கொள்ளவும்
  6. பேக்கிங்  பவுடர்  - 1/2 டீஸ்பூன்
  7. பேக்கிங் சோடா  - 1/2 டீஸ்பூன்
  8. உப்பு- ஒரு சிட்டிகை
  9. சர்க்கரை - 5 அல்லது 6 மேசைக்கரண்டி
  10. பால் - 3/4 கப்
  11. பேரிட்சை பழம் - 12
  12. வால்நட் - 10 - நன்கு பொடித்து கொள்ளவும்
  13. பிஸ்தா  - 10 - நன்கு பொடித்து கொள்ளவும்
  14. பாதாம் பருப்பு  - 10 - நன்கு பொடித்து கொள்ளவும்
  15. உலர்ந்த திராட்சை- 10

வழிமுறைகள்

  1. குக்கரில் உப்பு/மண் இட்டு 5 நிமிடம் சூடேற்ற வேண்டும்(பெல்ட் மற்றும் விசில் உபயோகிக்க கூடாது)
  2. சிறிதளவு பொடித்த பாதாம், பிஸ்தா மற்றும் வால்நட்களை தனியாக எடுத்து வைக்கவும் கேக்கின் மேல் தூவுவதற்கு.
  3. பின்பு மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கிளறவும்.
  4. பேக்கிங் செய்யும் மோல்டில் சிறிது பட்டர் தேய்த்து கிளறிய கலவை யை ஊற்றி வைக்கவும்.
  5. பொடித்த பாதாம், பிஸ்தா மற்றும் வால்நட்களை கலவை யின் மேல் தூவி விடவும்.
  6. கலவை உள்ள பாத்திரத்தை இரண்டு முறை மெதுவாக தரையில் தட்டி, பின்பு குக்கரினுல் வைத்து 40-45 நிமிடங்கள் மிதமான தீயில்  வேக வைக்கவும்.
  7. 45 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து கேக்   தயாராகி விட்டதா என சரி பார்க்கவும்.
  8. கேக் தயாரான பின் குக்கரில் இருந்து எடுத்து குளிர வைக்கவும்.
  9. குளிர்ந்த பின் விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்