வீடு / சமையல் குறிப்பு / மட்டன் தம் பிரியாணி

Photo of Mutton dum biryani by Rabia Hamnah at BetterButter
495
0
0.0(0)
0

மட்டன் தம் பிரியாணி

Jul-26-2018
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

மட்டன் தம் பிரியாணி செய்முறை பற்றி

பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அந்த பிரியாணியை எப்படி சுலபமாக செய்வது என்று பார்ப்போம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. மட்டன் -1 கிலோ
  2. அரிசி -1 கிலோ
  3. எண்ணெய் –150 கிராம்
  4. நெய்-150கிராம்
  5. வெங்காயம் -1/2 கிலோ
  6. தக்காளி- 1/2கிலோ
  7. இஞ்சி , பூண்டு விழுது– 5 மே.கரண்டி
  8. மல்லி இலை ஒரு கட்டு
  9. புதினா 1 கட்டு
  10. மிள்காய் 8
  11. தயிர் 1/2கப்
  12. பட்டை 3 துண்டு கிராம்பு -4 ஏலக்காய் -7
  13. சிகப்பு மிளகாய் தூள் -6 டீஸ்பூன்
  14. மஞ்சள் பொடி 1 தேக்கரண்டி
  15. ரெட்கலர் பொடி 1 சிட்டிகை
  16. எலுமிச்சை பழம் 1
  17. நெய் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பிரியாணி (அடிகனமான) பாத்திரத்தில் எண்ணெய் நெய் ஊற்றி நல்ல கய்ந்ததும் பட்டை , கிராம்பு , எலக்காய் போடவும்.அது வெடித்ததும் நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி விடவும்.
  2. நல்ல வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும்.
  3. ஓவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேண்டும்.அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும். பிறகு கொத்தமல்லி புதினா வை போட்டு கிளறவும்
  4. அதன் பின் தக்காளி ப.மிளகாய் போடவும். இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். எண்ணையில் எல்லா பொருட்களும் நன்கு வதங்கியவுடன் மட்டனை போடவும்.
  5. மட்டனை போட்டு பிறகு தயிரை நன்கு ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து மட்டனை வேகவிடவும். தீயின் அள‌வை குறைத்து வைத்து செய்வ‌தால் அடி பிடிக்காது.
  6. அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும். மற்றும் ஒரு பாத்திரத்தில் சம அளவு தண்ணீர் ஊற்றி உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும். அதில் ஊறிய அரிசியினை வடிகட்டி சேர்க்கவும் .
  7. சாதம் முக்கால் பதம் வெந்த பின்பு அடுப்பினை சிம்மில் வைத்து வேக வைத்த மட்டன் கிரேவியினை சேர்க்கவும்.
  8. நன்றாக சமப்படுத்தி மேலே கலர் பொடியினை ஒரு ஸ்பூன் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். அதன் பிறகு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும். கனமான மூடி போட்டு தம்மில் வேக வைக்கவும் . பிறகு பத்து நிமிடங்கள் கழித்து அகப்பையினை வைத்து அரிசி உடையாமல் கிண்டிவிட்டு இறக்கவும்.
  9. சுவையான மட்டன் தம் பிரியாணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்