வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக்காய், கத்தரிக்காய் சேர்த்த இறால் தலை குழம்பு

Photo of Prawn head curry with drumstick and brinjal by Rabia Hamnah at BetterButter
858
0
0.0(0)
0

முருங்கைக்காய், கத்தரிக்காய் சேர்த்த இறால் தலை குழம்பு

Jul-26-2018
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக்காய், கத்தரிக்காய் சேர்த்த இறால் தலை குழம்பு செய்முறை பற்றி

மன மனக்கும் இறால் தலை குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இறால் தலை ~15
  2. இறால்-5 (விருப்பப்பட்டால்)
  3. தேங்காய் பால் ~1/2 கப்
  4. முருங்கைகாய் ~ 1
  5. கத்தரிக்காய்-2
  6. வெங்காயம் ~1
  7. தக்காளி ~3
  8. இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை ~ 1 கைப்பிடி அளவு
  10. மஞ்சள் தூள் ~ 1/2 ஸ்பூன்
  11. மிளகாய்த் தூள் ~ காரத்திற்கேற்ப
  12. உப்பு ~ தேவையான அளவு
  13. எண்ணெய் ~ 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  3. அதில் மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து தாளிக்கவும்.
  4. பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கனிய விட்டு வேக விடவும்.
  5. தக்காளி கனிந்து வெந்ததும் முருங்கைகாய், கத்தரிக்காய் சேர்த்து அந்த எண்ணெயிலேயே கொஞ்ச நேரம் வதக்கவும்.
  6. முருங்கைக்காய் வேகும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் காரத்திற்கேற்ப மிளகாய் பொடி சேர்க்கவும்.
  7. முருங்கைக்காய் முக்கால் பதம் வெந்ததும், தேங்காய் பால் சேர்த்து கொதித்ததும் ,
  8. சுத்தம் செய்த இறால் மற்றும் இறால் தலையை சேர்த்து வேக விட்டு இறக்கவும்.
  9. சுவையான , நல்ல வாசனையான இறால் தலை குழம்பு தயார். ..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்