வீடு / சமையல் குறிப்பு / ட்ரை கலர் செலிபிரேஷன் கேக்

Photo of TriColour Celebration Cake by Sowmya Sundar at BetterButter
137
1
0.0(0)
0

ட்ரை கலர் செலிபிரேஷன் கேக்

Jul-26-2018
Sowmya Sundar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ட்ரை கலர் செலிபிரேஷன் கேக் செய்முறை பற்றி

பெட்டர்பட்டர் ஆண்டு விழாவை முன்னிட்டு நான் செய்த மூன்று கலர் கேக் இது. செயற்கை நிறங்கள் சேர்க்காமல் செய்த கேக் இது .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • இந்திய
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மஞ்சள் நிற கேக் செய்ய:
  2. மாம்பழ விழுது-1/2 கப்
  3. மைதா மாவு-1 கப்
  4. பொடித்த சர்க்கரை-1/2 கப்
  5. வெண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  6. தயிர்-2 டேபிள் ஸ்பூன்
  7. பால் - 2 டேபிள் ஸ்பூன்
  8. பேக்கிங் பவுடர்-1/2 டீஸ்பூன்
  9. பேக்கிங் சோடா-1/4 டீஸ்பூன்
  10. சாக்லேட் கேக் செய்ய:
  11. மைதா மாவு-1 கப்
  12. பொடித்த சர்க்கரை-3/4 கப்
  13. வெண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  14. தயிர்-2 டேபிள் ஸ்பூன்
  15. பால் -3 டேபிள் ஸ்பூன்
  16. கொக்கோ பவுடர்-1/4 கப்
  17. பேக்கிங் பவுடர்-1/2 டீஸ்பூன்
  18. பேக்கிங் சோடா- 1/4 டீஸ்பூன்
  19. ரெட் வெல்வெட் கேக் செய்ய:
  20. நறுக்கிய பீட்ரூட்- 1/2 கப்
  21. மைதா மாவு-1 கப்
  22. பொடித்த சர்க்கரை-1/2 கப்
  23. வெண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  24. தயிர்-2 டேபிள் ஸ்பூன்
  25. பால் -2 டேபிள் ஸ்பூன்
  26. வெனிலா எசன்ஸ்-1 டீஸ்பூன்
  27. பேக்கிங் பவுடர்-1/2 டீஸ்பூன்
  28. பேக்கிங் சோடா-1/4 டீஸ்பூன்
  29. ட்ரை ப்ரூட்ஸ் -சிறிதளவு

வழிமுறைகள்

  1. சாக்லேட் கேக் செய்ய முதலில் வெண்ணெய், சர்க்கரை, தயிர் சேர்த்து நன்கு கலந்து கொண்டு பின்னர் அதனுடன் சலித்த மைதா மாவு ,கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்ந்த மெதுவாக கலந்து கொள்ளவும்
  2. அடுத்து மேங்கோ கேக் செய்ய மாம்பழத்தை நறுக்கி மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்
  3. அதனுடன் வெண்ணெய், சர்க்கரை, பால் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொண்டு பின் மைதா மாவு ,பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. ரெட் வெல்வெட் கேக் செய்ய முதலில் பீட்ரூட்டை தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் வரை வேக வைத்து தண்ணீரை வடித்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  5. பின்னர் அந்த பீட்ரூட் விழுதுடன் வெண்ணெய், தயிர், பால் நன்றாக கலந்து பின் மைதா மாவு, பேக்கிங் பவுடர் ,பேக்கிங் சோடா, வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. ஓவனை ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும்
  7. பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி மைதா மாவை தூவி கொள்ளவும். அதில் முதலில் சாக்லேட் கேக் கலவையை ஊற்றவும்
  8. அதன் மேல் மேங்கோ கேக் கலவையை விட்டு அதன் மேல் ரெட் வெல்வெட் கேக் கலவையை சேர்த்து கொள்ளவும்
  9. இப்போது ட்ரை ப்ரூட்ஸ்ஸை மேலே தூவி ஓவனில் 180 டிகிரியில் முப்பது முதல் நாற்பது நிமிடம் வரை பேக் செய்யவும்
  10. நன்றாக ஆறியதும் கட் செய்து பரிமாறவும். நான் கேக்கின் மேல் சர்க்கரை பொடியால் பெட்டர்பட்டர் லோகோவை வரைந்துள்ளேன்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்