வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பிரியாணி

Photo of Mutton biriyani by Swarna Vijayakumaar at BetterButter
360
2
0.0(0)
0

மட்டன் பிரியாணி

Jul-26-2018
Swarna Vijayakumaar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாஸ்மதி/ சீரக சம்பா 1/2 கிலோ
  2. மட்டன் - 1/2 கிலோ
  3. பெரிய வெங்காயம் - 3
  4. தக்காளி - 2
  5. இஞ்சி பூண்டு விழுது 2 மேசை கரண்டி
  6. தயிர் - 1 கப்
  7. மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
  8. ப.மிளகாய் - 3
  9. பட்டை,கிராம்பு,ஏலக்காய் தலா 4
  10. பிரிஞ்சி இலை - 1
  11. மல்லிதலை,புதினா 1 கைப்பிடி
  12. எலுமிச்சம் பழம் - 1
  13. எண்ணெய் + நெய் - கால் கப்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்களி ப.மிளகாய் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்
  2. பெரிய கணமான பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்
  3. வெங்காயம், ப.மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து குழைய வதக்கவும்
  5. அடுத்து மட்டன் சேர்த்து வதக்கி மல்லிதலை,புதினா,தயிர் சேர்த்து வதக்கவும்
  6. வதங்கிய பின் மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கி ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கறியை வேக வைக்கவும்
  7. நன்கு கொதித்து வரும்போது அரிசியை சேர்த்து கிளறி வேகவைத்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்