வீடு / சமையல் குறிப்பு / முப்பருப்பு பாயசம்

Photo of Tri dhal Payasam by Sowmya Sundar at BetterButter
398
1
0.0(0)
0

முப்பருப்பு பாயசம்

Jul-26-2018
Sowmya Sundar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முப்பருப்பு பாயசம் செய்முறை பற்றி

மூன்று வகையான பருப்பு வகைகள் மற்றும் வெல்லம் சேர்த்து செய்த பாயசம் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு-1/2 கப்
  2. கடலை பருப்பு-3 டேபிள் ஸ்பூன்
  3. பாதாம் பருப்பு-10
  4. வெல்லம்-1 கப்
  5. காய்ச்சிய பால் -3 கப்
  6. நெய்- 1 டேபிள் ஸ்பூன்
  7. முந்திரி பருப்பு-8

வழிமுறைகள்

  1. கடாயில் பாசிப்பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து லேசாக வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
  2. பாதாம் பருப்பை வெந்நீரில் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தோல் உரித்து சிறிது பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  3. பாசிப்பருப்பு மற்றும் கடலை பருப்பு இரண்டையும் குக்கரில் தண்ணீர் விட்டு வேக விடவும்
  4. வெந்ததும் வடிகட்டிய வெல்ல நீரை சேர்த்து கொதிக்க விடவும்.
  5. பின்னர் அதனுடன் அரைத்த பாதாம் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
  6. பிறகு காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்
  7. நெய்யில் வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்