வீடு / சமையல் குறிப்பு / முருங்கை கீரை அடை தோசை

Photo of Murungai leaf adai dosa by Balajayasri Dhamu at BetterButter
404
0
0.0(0)
0

முருங்கை கீரை அடை தோசை

Jul-27-2018
Balajayasri Dhamu
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முருங்கை கீரை அடை தோசை செய்முறை பற்றி

முருங்கை கீரை மற்றும் அரிசி, பருப்பு பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி ஒரு கப்
  2. துவரம் பருப்பு அரை கப்
  3. சீரகம் ஒரு ஸ்பூன்
  4. மிளகு5
  5. வர மிளகாய்5
  6. தேங்காய் துருவல்ஒரு மூடி
  7. சின்ன வெங்காயம் 5(விருப்பம்)
  8. முருங்கை இலை ஒரு கப்
  9. கடுகு1ஸ்பூன்
  10. உளுந்து1ஸ்பூன்
  11. பெருங்காயம் தூள் சிறிது
  12. எண்ணெய் தேவையான அளவு
  13. உப்பு தேவையான அளவு
  14. சின்ன வெங்காயம் ஐந்து

வழிமுறைகள்

  1. முதலில் அரிசி ,துவரம்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி கொண்டு 2மணிநேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும்
  2. பின்னர் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சிரகம் மிளகாய் சின்ன வெங்காயம் தேங்காய் துருவல் அரிசி சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. துவரம்பருப்பு தனியாக அரைத்து கொள்ளவும்
  4. இரண்டையும் சேர்த்து உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  5. தாளிக்க கடுகு,உளுந்து, பெருங்காயம் சேர்த்து தாளித்துமாவில் கொட்டி கொள்ள வேண்டும்
  6. பின்னர் முருங்கை கீரை நன்றாக தண்ணீரில் அலசி கொண்டு மாவில் கலந்து கொள்ள வேண்டும்
  7. இப்போது தோசை கல்லில் ஊற்றவும்
  8. மெலிதாக தோசை வேண்டும் என்றால் தண்ணீர் ஊற்றி மாவை கரைத்து கொள்ளவும்
  9. மாவு அடை போல வேண்டும் என்றால் தண்ணீர் அதிகம் ஊற்ற வேண்டாம்
  10. இப்போது சுவையான முருங்கை கீரை அடை தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்