வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி அடை தோசை

Photo of Spicy adai dosai by hajirasheed haroon at BetterButter
362
1
0.0(0)
0

ஸ்பைசி அடை தோசை

Jul-27-2018
hajirasheed haroon
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி அடை தோசை செய்முறை பற்றி

பச்சரிசி புழுங்கல் அரிசி பருப்பு வகைகள் சேர்த்து செய்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி அரை டம்ளர்
  2. அரிசி அரை கிலோ
  3. உளுத்தம்பருப்பு கால் டம்ளர்
  4. துவரம் பருப்பு கால் டம்ளர்
  5. கடலை பருப்பு கால் டம்ளர்
  6. காய்ந்த மிளகாய் 4
  7. சோம்பு ஒரு ஸ்பூன்
  8. சீரகம் ஒரு ஸ்பூன்
  9. மிளகு ஒரு ஸ்பூன்
  10. பூண்டு 10 பல்
  11. வெங்காயம் 2
  12. மல்லி இலை சிறிதளவு
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பச்சரிசி புழுங்கல் அரிசி கடலைப்பருப்பு துவரம்பருப்பு உளுத்தம்பருப்பு ஐந்தையும் கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்
  2. ஊறிய அரிசியை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் அதனுடன் காய்ந்த மிளகாய் சோம்பு அரை டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் மிளகு பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்
  3. அரைத்த மாவை 2 மணி நேரம் கழித்து அதில் மீதியுள்ள சீரகம் மிளகு பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  4. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
  5. சுவையான அடை தோசை தயார் இதை தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்