வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் மில்லட் பொங்கல்

Photo of Sweet Millet Pongal by Sowmya Sundar at BetterButter
238
2
0.0(0)
0

ஸ்வீட் மில்லட் பொங்கல்

Jul-27-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் மில்லட் பொங்கல் செய்முறை பற்றி

எப்போதும் ஒரே போல பச்சரிசி வைத்து பொங்கல் செய்வதற்கு மாற்றாக திணையரிசி,வரகரிசி மற்றும் வெல்லம் சேர்த்து செய்த இனிப்பு பொங்கல் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. திணையரிசி-1/2 கப்
  2. வரகரிசி-1/2 கப்
  3. பாசிப்பருப்பு-2 டேபிள் ஸ்பூன்
  4. பால் -1/2 கப்
  5. நெய்- 1/4 கப்
  6. வெல்லம்- 1 1/2 கப்
  7. முந்திரி பருப்பு-8
  8. கிஸ்மிஸ்-8
  9. ஏலக்காய் பொடி-1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. திணை ,பாசிப்பருப்பு மற்றும் வரகு சேர்த்து களைந்து விட்டு குக்கரில் பால் மற்றும் மூன்று கப் தண்ணீர் சேர்த்து குழைய வேக விடவும்
  2. கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்
  3. பின்னர் அதே கடாயில் வெல்லம் மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும்
  4. மறுபடியும் வெல்ல நீரை விட்டு அதில் வெந்த அரிசி பருப்பை சேர்த்து மீதி நெய் விட்டு நன்கு கிளறவும்
  5. நன்றாக கிளறி ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்