வீடு / சமையல் குறிப்பு / காய்கறி பக்கோடா

Photo of vegetable pakkoda by Apsara Fareej at BetterButter
532
1
0.0(0)
0

காய்கறி பக்கோடா

Jul-27-2018
Apsara Fareej
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காய்கறி பக்கோடா செய்முறை பற்றி

நினைத்தவுடன் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சுலபமா செய்து விடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • அப்பிடைசர்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலை மாவு - 4 மேசைக்கரண்டி
  2. அரிசி மாவு - 1 1/2 மேசைக்கரண்டி
  3. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  4. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
  5. சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி
  6. முட்டைகோஸ் நீளவாக்கில் அரிந்தது - 3/4 கப்
  7. கேரட் , குடைமிளகாய்( விரும்பிய வண்ணம்) - தலா 1/4 கப்
  8. பெரிய வெங்காயம் - 1
  9. கறிவேப்பிலை - 2 கொத்து
  10. எண்ணெய் - பொறித்தெடுப்பதற்கு
  11. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காய்களை நீளாக்கில் அரிந்து வைத்து கொள்ளவும். நான் பச்சைகலர் குடைமிளகாய் மட்டும் சேர்த்துள்ளேன். மூன்று வண்ண குடைமிளாகாய்களிலும் சிறிது சிறிது சேர்த்துக் கொள்ளலாம். காரம் நன்கு விரும்புபவர்கள் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.
  2. ஒரு பாத்திரத்தில் அரிந்த காய்களை சேர்த்து, அதில் மாவு வகைகளையும், தூள்களையும், உப்பையும்( நான் 3/4 தேக்கரண்டி சேர்த்தேன்) சேர்த்து கையால் நன்கு பிசரி விடவும். காய்கள் தண்ணீர் விடும் என்பதால் பிசரி விட்டபின், இரண்டு மேசைக்கரண்டி அளவு தண்ணீர் தெளித்து பிசைந்து வைக்கவும்.
  3. ஒரு வானலியில் எண்ணெயை சூடு பண்ணவும். சூடு வந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பிசைந்ததை கிள்ளி விட்டாற்போல் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான சூப்பரான மொறு மொறுவென்றிருக்கும் காய்கறி பக்கோடா ரெடி. டீயுடன் பரிமாறுவதற்கு ஏற்ற மாலை சிற்றுண்டி.
  4. விருந்தினரின் திடீர் வருகையின் போது வெறும் டீ மட்டுமல்லாது இதை 15 நிமிடத்தில் செய்து வைத்து அசத்திடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்