வீடு / சமையல் குறிப்பு / பாசிபருப்பு சாம்பார்

Photo of paasi paruppu sambar by Apsara Fareej at BetterButter
976
0
0.0(0)
0

பாசிபருப்பு சாம்பார்

Jul-27-2018
Apsara Fareej
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

பாசிபருப்பு சாம்பார் செய்முறை பற்றி

மிகவும் சுலபமான, செய்வதற்க்கு எளிதானது. சமையல் கற்றுகொண்டிருப்பவர்கள் செய்து பார்க்க சுலபமாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பாசிபருப்பு - 1 ஆழாக்கு( டம்ளர்)
  2. பெரிய வெங்காயம் - 1
  3. சிறிய வெங்காயம் - ஒரு கையளவு
  4. தக்காளி - பெரியதாக 1
  5. பச்சைமிளகாய் - 2
  6. கறிவேப்பிலை - 2 கொத்து
  7. மல்லிதழை - சிறிதளவு
  8. பூண்டு - 2 பல்
  9. மிளகாய்த்தூள் - 2 1/2 தேக்கரண்டி
  10. மஞ்சள்த்தூள் - 1 தேக்கரண்டி
  11. மல்லித்தூள் - 1 1/2 தேக்கரண்டி
  12. எண்ணெய் - 2 குழிக்கரண்டி
  13. கத்திரிக்காய் - பெரியதாக 1
  14. அவரைக்காய் - 7
  15. முருங்கக்காய் - 2
  16. கேரட் - 1 விரல் அளவு
  17. உப்பு - தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை நன்கு கழுவி விட்டு வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள்த்தூள் சேர்த்து ரொம்பவும் கரைந்து விடாதவாறு வேகவைத்து கொள்ளவும்.
  2. காய்களை நன்கு கழுவிட்டு விரும்பிய வடிவில் அரிந்து( சின்ன வெங்காயம், பூண்டை தவிர்த்து) குழம்பு செய்யும் பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி , பருப்பில் தண்ணீர் இருந்தால் அதையும் இதில் ஊற்றி தேவையான அளவு உப்பு, மல்லித்தூள், மிளாகய்த்தூளில் ஒரு ஸ்பூன் மட்டும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  3. காய்கள் வெந்ததும் வெந்த பருப்பை ஒரு தடவை மசித்து விட்டு அதில் சேர்த்து தண்ணீர் தேவையான அளவும் ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
  4. கொதித்த உடன் இறக்கி விட்டு மற்றொரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும். பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து லேசாக பொரிந்தபின் நீளவாக்கில் அரிந்த சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். நிறம் மாறும் அளவு வதங்கியதும், கறிவேப்பிலை மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி விட்டு சாம்பாரை அதில் ஊற்றவும். கொஞ்சம் திக்காக இருப்பின் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  5. அரிந்த மல்லிதழையை தூவி ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் அருமையான பாசிபருப்பு சாம்பார் தயார். சாதத்திற்க்கு, இட்லி, தோசை இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றிற்கும் ஏற்றதாக இருக்கும்.
  6. இதில் வெறும் வெங்காயம் மற்றும் முட்டைகோஸ் கேரட் போட்டு கூட செய்யலாம். என்ன குழம்பு வைக்கலாம் என்று குழம்புவர்கள் வீட்டில் இருப்பதை கொண்டு செய்யக்கூடிய எளிய சாம்பார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்