வீடு / சமையல் குறிப்பு / ஸ்பெஷல் தக்காளி சாதம்

Photo of Special tomato rice by Maala Rajamanickam at BetterButter
495
0
0.0(0)
0

ஸ்பெஷல் தக்காளி சாதம்

Jul-27-2018
Maala Rajamanickam
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்பெஷல் தக்காளி சாதம் செய்முறை பற்றி

Different style tomato rice

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிறிய வெங்காயம்
  2. பூண்டு
  3. இஞ்சி
  4. பச்சை மிளகாய்
  5. தக்காளி
  6. பட்டை
  7. இலவங்கம்
  8. ஏலக்காய்
  9. முந்திரி
  10. கசகச
  11. சோம்பு
  12. பொதினா இலை
  13. கொத்தமல்லி இலை
  14. மிளகாய் தூள்
  15. மஞ்சள் தூள்
  16. உப்பு
  17. மராட்டி மொக்கு
  18. பிரியாணி இலை
  19. தேங்காய் துருவல்

வழிமுறைகள்

  1. 1. 3 பேருக்கு தேவையான அரிசியை 1 மணி நேரத்திற்கு முன்பாகவே ஊற வைக்கவும்.
  2. 2. சிறிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், 7 தக்காளி, , பொதினா இலை, கொத்தமல்லி இலை, இஞ்சி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை இவற்றை எடுத்து வைத்துக் கொள்க.
  3. 3. அரைக்க தேவையானவை : தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு, சிறிய வெங்காயம், பொதினா இலை, கொத்தமல்லி இலை பட்டை, இலவங்கம், கசகசா, சோம்பு இவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்க.
  4. 4. குக்கரை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி மற்றும் சிறிது ரீபைண்ட் எண்ணெய் ஊற்றி அதில் பிரியாணி இலை, பட்டை, இலவங்கம், 6 முந்திரி, ஏலக்காய், சிறிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப போட்டு வணக்க வேண்டும். பின்பு மிக்ஸியில் அரைத்த விழுதை அதில் போட வேண்டும்.. பின்பு அவை சிறிது சுண்டியவுடன் தக்காளி, பொதினா இலை, கொத்தமல்லி இலை சிறிது போட்டு வணக்க வேண்டும்..
  5. 5. அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சேர்த்து நன்றாக சுண்டும் வரை விட வேண்டும். பின்பு தேவையான தண்ணீர் அளந்து ஊற்றி கொதிக்கும் போது அரிசியை போட வேண்டும். அது கொதிக்கும் பொழுது உப்பு, காரம் பார்த்து குக்கரில் வைட் போட்டு 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் கழித்து அதை வேறு பாத்திரத்தில் மாற்ற வேண்டும். இல்லையெனில் அரிசி குழன்று விடும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்