வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி சிக்கன் கிரேவி

Photo of Spicy chicken gravey by hajirasheed haroon at BetterButter
615
3
0.0(0)
0

ஸ்பைசி சிக்கன் கிரேவி

Jul-28-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி சிக்கன் கிரேவி செய்முறை பற்றி

சைட்டிஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் 1/2 கிலோ
  2. வெங்காயம் 4
  3. தக்காளி 3
  4. பூண்டு விழுது 3 டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  7. மல்லி தூள் ஒரு ஸ்பூன்
  8. பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்
  9. சிக்கன் கிரேவி மசாலா ஒரு ஸ்பூன்
  10. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு
  11. சீரகம் ஒரு ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெய் தேவையான அளவு
  14. தண்ணீர் ஒரு டம்ளர்
  15. கொத்தமல்லி இலை

வழிமுறைகள்

  1. சிக்கனில் மஞ்சள்தூள் சேர்த்து கழுவி எடுத்துக் கொள்ளவும்
  2. வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும் தக்காளியை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் அரைத்த தக்காளி விழுது சிக்கன் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சிக்கன் கிரேவி மசாலாத்தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்
  4. சிக்கன் கலவையில் தண்ணீர் ஊற்றி 3 விசில் விடவும்
  5. கடைசியாக பெப்பர் தூள் கொத்தமல்லி இலை தூவி சிறிது கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து பரிமாறலாம்
  6. சுவையான சிக்கன் கிரேவி தயார் இதை சப்பாத்தி பரோட்டா சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்