வீடு / சமையல் குறிப்பு / கேரளா காய்கறி அவியல்

Photo of Kerala Mixed Vegetable Avial by Sowmya Sundar at BetterButter
1777
1
0.0(0)
0

கேரளா காய்கறி அவியல்

Jul-28-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரளா காய்கறி அவியல் செய்முறை பற்றி

பலவிதமான காய்கறிகள் ,தேங்காய் மற்றும் தயிர் சேர்த்து செய்த அவியல். விழா மற்றும் பண்டிகை நாட்களில் கட்டாயம் செய்வோம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கலவை காய்கறிகள்(பூசணி, காரட், பீன்ஸ், உருளை,வாழைக்காய்,சௌசௌ முதலியன)-3 கப்
  2. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. தேங்காய் எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  5. கறிவேப்பிலை சிறிது
  6. அரைக்க
  7. தேங்காய்-1/2 கப்
  8. தயிர்-1/4 கப்
  9. பச்சை மிளகாய்-3
  10. சீரகம்-1 டீஸ்பூன்
  11. அரிசி மாவு-1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் காய்கறிகள் மற்றும் அவை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு உப்பு ,மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக விடவும்.
  2. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  3. காய் வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
  4. தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்