வீடு / சமையல் குறிப்பு / சொதி குழம்பு

Photo of Sothi kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
735
1
4.0(0)
0

சொதி குழம்பு

Jul-29-2018
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சொதி குழம்பு செய்முறை பற்றி

எங்கள் ஊரில் எல்லா விருந்துகளுக்கும் செய்யப்படும் குழம்பு வகை இது. ஹோட்டல்களில் கூட வெள்ளிக்கிழமையன்று சாம்பாருக்கு பதில் சொதி செய்வது மிகவும் பிரபலம். பூண்டு இஞ்சி சேர்க்காமல் செய்துள்ளேன். டிரடீஷனல் சொதியில் இஞ்சி பூண்டு கண்டிப்பாக சேர்ப்பார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தேங்காய் மீடியம் சைஸ் 1
  2. வெங்காயம் 1 பெரியது/சின்ன வெங்காயம் 12 முதல் 15
  3. தக்காளி-2
  4. உருளைக்கிழங்கு ஒன்று பெரியது
  5. கேரட் ,முருங்கைக்காய் ,பீன்ஸ் ,பச்சைப் பட்டாணி- விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்
  6. பாசிப்பருப்பு கால் கப்
  7. உப்பு ஒன்றரை தேக்கரண்டி
  8. தாளிக்க தேவையானவை
  9. தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  10. சீரகம் ஒரு தேக்கரண்டி
  11. பச்ச மிளகாய் 4
  12. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. தேங்காயை துருவி சிறிது தண்ணீர் சேர்த்து முறையே முதல் மற்றும் இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும்
  2. காய்களைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. பாசிப்பருப்பை தனியாக குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. வெங்காயம் தக்காளி தவிர்த்து மற்ற காய்களை 5 நிமிடம் தனியே தண்ணீரில் வேக வைத்து சேர்க்கவும்
  7. இரண்டாம் பால் சேர்த்து கொதிக்க விடவும்
  8. வேக வைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும்
  9. முதல் பால் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  10. இஞ்சி துவையல் மற்றும் உருளைக்கிழங்கு காரகறி உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்