Photo of Mutton Dum Biriyani by Jayanthi kadhir at BetterButter
936
2
0.0(1)
0

Mutton Dum Biriyani

Jul-29-2018
Jayanthi kadhir
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி 3 கப்
  2. வெங்காயம் 6
  3. தக்காளி நான்கு
  4. இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேசைக்கரண்டி
  5. 7 பச்சை மிளகாய்
  6. புதினா கொத்தமல்லி தலா அரை கப்
  7. பட்டை லவங்கம் கிராம்பு பிரியாணி இலை
  8. இரண்டு மேஜைக்கரண்டி நெய்
  9. அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. இரண்டு டீஸ்பூன் தயிர்
  12. அரை மூடி எலுமிச்சை பழம்
  13. 100 மில்லி எண்ணெய்
  14. மட்டன் அரை கிலோ
  15. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் தேவையான பொருட்களை அறிந்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கி கொள்ளவும்
  3. அதில் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்
  4. பின்னர் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. வெங்காயம் பச்சை மிளகாய் நன்றாக வதங்கிய பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
  6. இஞ்சி பூண்டு பச்சை வாடை போன பின் அதில் தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்
  7. பின்பு அதில் கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்
  8. 2 நிமிடம் கழித்து அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தயிர் உப்பு சேர்த்து எண்ணெய் மேலே வரும் வரை வதக்கவும்
  9. மசாலா நன்கு வதங்கி எண்ணெய் மேலே வரும் வரை வைக்கவும் இதற்கு ஒரு ஐந்து நிமிடம் தேவைப்படும்
  10. அதன் பின் அதில் ஆட்டிறைச்சியை சேர்த்து நன்கு வதக்கவும்
  11. ஐந்து நிமிடம் வதக்கியபின் எண்ணெய் மேலே வரும் அதன்பின் அரை கப் தண்ணீர் சேர்த்து 10 விசில் வைத்து வேக வைத்து இறக்கவும். குக்கர் திறந்த பின் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி விடவும்.
  12. வேறு ஒரு பாத்திரத்தில் சாதம் வடிபதற்கு தண்ணீர் சேர்த்து அதில் ஒரு பட்டை லவங்கம் ஏலக்காய் நெய் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  13. கொதி நன்றாக வந்த பின் அதில் 30 நிமிடம் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்
  14. சாதம் முக்கால் பாகம் வெந்ததும் அதை வடித்து கொள்ளவும்
  15. தம் போடும் பாத்திரத்தில் குக்கரில் வேக வைத்துள்ள கறி மசாலாவை மாற்றி உதவும்
  16. மசாலாவின் மேல் வடித்து வைத்துள்ள சாதத்தை கொட்டி பரப்பவும்
  17. பின்பு அதை தட்டு போட்டு மூடி அதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தம் போட்டு 15 நிமிடம் சிறு தீயில் வைக்கவும்
  18. 15 நிமிடம் கழித்து அதை மெதுவாக சாதம் உடையாமல் கிளறவும்
  19. சுவையான மட்டன் தம் பிரியாணி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
hajirasheed haroon
Jul-29-2018
hajirasheed haroon   Jul-29-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்