வீடு / சமையல் குறிப்பு / நார்ஃகிசி கோஃப்தா கிரேவி

Photo of Nargisi Kofta curry by kokila nalliyannan at BetterButter
420
1
0.0(0)
0

நார்ஃகிசி கோஃப்தா கிரேவி

Jul-29-2018
kokila nalliyannan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நார்ஃகிசி கோஃப்தா கிரேவி செய்முறை பற்றி

இந்த கிரேவி மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு இது ரொம்பவும் பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் கொத்துக்கறி 200 கிராம்
  2. அவித்த முட்டை 3
  3. நெய் 3 tsp
  4. ஏலக்காய் ஒன்று
  5. கிராம்பு-3
  6. பட்டை ஒன்று
  7. பிரிஞ்சி இலை ஒன்று
  8. பெரிய வெங்காயம் 2
  9. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  10. தக்காளி 3
  11. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  12. மிளகாய்த்தூள் 1.5 டீஸ்பூன்
  13. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  14. மல்லி தூள் ஒரு டீஸ்பூன்
  15. பிரட் தூள் தேவையான அளவு
  16. முந்திரி விழுது கால் கப்
  17. உப்பு தேவையான அளவு
  18. தண்ணீர் தேவையான அளவு
  19. நறுக்கிய மல்லி இலை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் 200 கிராம் மட்டன் கொத்துக்கறி எடுத்துக் கொள்ளவும்
  2. அதன் உடன் 1\2 tsp மிளகாய் தூள், 2 tsp பிரட் கிரம்ஸ், 2 tbsp நறுக்கிய வெங்காயம், மல்லி இலை & தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  3. இந்த கலவையை அவித்த முட்டையின் மேல் புறம் வைத்து முட்டையை நன்றாக மூடிக் கொள்ளவும்
  4. பெரிய வெங்காயம் தக்காளி இரண்டையும் தனித்தனியாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  5. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்துக் கொள்ளவும்
  6. நெய் சூடானதும் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  7. வெங்காய விழுது இஞ்சி பூண்டு விழுது இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  8. கொடுக்கப்பட்டுள்ள மசாலா தூள்களை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  9. தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்
  10. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  11. குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்தவுடன் முந்திரி விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும்
  12. உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  13. நாம் தயார் செய்து வைத்த கோஃப்தாவை கிரேவியில் வைக்கவும்
  14. பாத்திரத்தை மூடி பத்திலிருந்து இருபது நிமிடம் வேக விடவும்
  15. ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கோத்தாவை திருப்பி விட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும்
  16. 20 நிமிடம் கழித்து மல்லித்தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்