வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை உருளைக்கிழங்கு கேப்சிகம் மசாலா

Photo of Peanut potato capsicum masala by jeyaveni chinniah at BetterButter
474
1
0.0(0)
0

வேர்கடலை உருளைக்கிழங்கு கேப்சிகம் மசாலா

Jul-29-2018
jeyaveni chinniah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை உருளைக்கிழங்கு கேப்சிகம் மசாலா செய்முறை பற்றி

சுவையான மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவு. உணவக சுவையில்..

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளை கிழங்கு-3
  2. குடைமிளகாய்-1
  3. பச்சை மிளகாய்-1 நீளமாக நறுக்கியது
  4. வெங்காயம்-1 நீளமாக நறுக்கியது
  5. தக்காளி-2
  6. வேர்க்கடலை-1/4 கப்
  7. பெருஞ்சீரகம்-2ஸ்பூன்
  8. கொத்தமல்லி தழை
  9. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  10. மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன்
  11. கொத்தமல்லி பொடி-1 ஸ்பூன்
  12. கரம் மசாலா-சிறிதளவு
  13. கஸ்தூரி மேதி -சிறிதளவு
  14. உப்பு தேவையான அளவு
  15. எண்ணெய் தேவையான அளவு
  16. முந்திரி-4
  17. இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன்
  18. கடுகு, உருட்டு பருப்பு தாளிக்க

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கை தோல் நீக்கி வேகவைத்து கொள்ளவும்
  2. அணைத்து தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்
  3. நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், தக்காளி, குடைமிளகாய் மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கு
  4. வாணலியில் பெருஞ்சீரகத்தை எண்ணெய் இல்லாமல் 2 நிமிடம் வறுக்கவும்
  5. வேர்க்கடலை மற்றும் முந்திரி பருப்பை தனியாக எண்ணெய் இல்லாமல் வறுத்து கொள்ளவும்
  6. இதனை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்
  7. வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
  8. வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்
  9. நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  10. பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்
  11. உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
  12. சிறிது தண்ணீர் சேர்த்து மூடி 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்
  13. பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் மூடி கொதிக்க விடவும்
  14. கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேதியை தூவி நன்றாக கிளறவும்
  15. 2 நிமிடத்திற்கு பிறகு வேர்க்கடலை பொடியை சேர்த்து நன்றாக கிளறவும்
  16. கொத்தமல்லி தழை தூவி சூடாக சப்பாத்தி, பூரி, தேங்காய் பால் சாதம் அல்லது விருப்பமான உணவுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்