வீடு / சமையல் குறிப்பு / கிராமத்து மீன் குழம்பு

Photo of Village style fish gravy by Rachell Revathi Samuel at BetterButter
641
2
0.0(0)
0

கிராமத்து மீன் குழம்பு

Jul-30-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கிராமத்து மீன் குழம்பு செய்முறை பற்றி

எனது ஆச்சி கற்றுக் கொடுத்த எளிதாக செய்யக்கூடிய மீன் குழம்பு செய்முறை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மீன் 3/4 கிலோ
  2. தேங்காய் 2 துண்டு
  3. பச்சை மிளகாய் 4
  4. தக்காளி 2
  5. சின்ன வெங்காயம் 10
  6. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  7. மல்லித்தூள் 2 ஸ்பூன்
  8. புளி நெல்லிக்காய் அளவு
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் 5 ஸ்பூன்
  11. கருவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. புளியை தண்ணீரில் நன்கு கரைத்து வைக்கவும்.
  2. தேங்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து புளிக்கரைசல் சேர்க்கவும்.
  4. மல்லித்தூள் சேர்க்கவும்.
  5. மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  6. அரைத்து வைத்துள்ள தேங்காய் வெங்காயம் தக்காளி கலவை சேர்க்கவும்
  7. கருவேப்பிலை சேர்க்கவும்.
  8. பச்சை மிளகாய் கீறி விட்டு சேர்க்கவும்.
  9. உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  10. எண்ணெய் 3 ஸ்பூன் சேர்க்கவும்.
  11. 10 நிமிடம் மூடி வைக்கவும்.குழம்பு நன்றாக கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
  12. நன்றாக கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்க்கவும்
  13. 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். மீன் பொரித்த எண்ணெய் இருந்தால் அதை சேர்த்துக் கொள்ளலாம்.
  14. 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.இறக்கும் முன் 5 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்.
  15. அடுப்பில் ஒரு வாணலியில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும்
  16. எண்ணெய் காய்ந்ததும் சிறிது கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  17. இதை குழம்பில் சேர்த்து இறக்கவும்.
  18. சுவையான மீன் குழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்