வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் கோஃப்தா

Photo of Raw banana kofta by Krishnasamy Vidya Valli at BetterButter
484
0
0.0(0)
0

வாழைக்காய் கோஃப்தா

Jul-30-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் கோஃப்தா செய்முறை பற்றி

சௌத் இந்தியன் காயான வாழைக்காயை வைத்து செய்யும் ஒரு நார்த்இந்தியன் ஒரு சைட் டிஷ் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைக்காய் ஒன்று
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கியது அரை தேக்கரண்டி
  5. கோஃபதாவிற்கு தேவையானவை
  6. கடலை மாவு 1 மேசைக் கரண்டி
  7. அரிசி மாவு ஒரு தேக்கரண்டி
  8. கான்பிளவர் ஒரு தேக்கரண்டி
  9. கசூரி மேத்தி ஒரு தேக்கரண்டி
  10. உப்பு கால் தேக்கரண்டி
  11. காஷ்மீரி சில்லி பவுடர் கால் தேக்கரண்டி
  12. தனியா பொடி சீரகப் பொடி தலா கால் தேக்கரண்டி
  13. கரம் மசாலா கால் தேக்கரண்டி
  14. மஞ்சள் பொடி 4 சிட்டிகை
  15. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  16. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  17. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  18. கிரேவிக்கு தேவையானவை
  19. உப்பு அரை தேக்கரண்டி
  20. காஷ்மீரி சில்லி பவுடர் அரை தேக்கரண்டி
  21. தனியா பொடி கால் தேக்கரண்டி
  22. சீரகப் பொடி கால் தேக்கரண்டி
  23. கரம் மசாலா பொடி கால் தேக்கரண்டி
  24. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  25. கசூரி மேத்தி ஒரு தேக்கரண்டி
  26. ஆம்சூர் பவுடர் கால் தேக்கரண்டி
  27. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  28. தாளிக்க தேவையானவை
  29. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  30. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு தேக்கரண்டி
  31. பட்டை ஒரு சிறிய துண்டு
  32. ஏலக்காய் கிராம்பு தலா 2
  33. முந்திரிபருப்பு 5 முதல் 8

வழிமுறைகள்

  1. வாழைக்காயின் தோலை உரிக்காமல் தண்ணீரில் குழையாமல் வேக விடவும்
  2. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. வேகவைத்த வாழைக்காயை தோலுரித்து துருவிக் கொள்ளவும்
  4. கோஃ்ப்தாவிற்கு கொடுத்த எல்லா பொருள்களையும் எடுத்துக் கொள்ளவும்
  5. எல்லாப் பொருள்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  6. கடாயில் எண்ணெய் விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  7. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  8. பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
  9. நன்றாக வதங்கியதும் சிறிது ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  10. கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்
  11. உப்பு கஸூரி மேத்தி மற்றும் எல்லா பொடிகளையும் சேர்த்து கிளறவும்
  12. பொரித்து வைத்த உருண்டைகளை அதில் சேர்த்து ஒரு கொதி விடவும்
  13. அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்