வீடு / சமையல் குறிப்பு / முட்டையில்லாத ஈஸ்ட் இல்லாத டோனட்டுகள்

Photo of Eggless Yeast Free Donuts by Nilanjana Bhattacharjee Mitra at BetterButter
6230
116
4.5(0)
2

முட்டையில்லாத ஈஸ்ட் இல்லாத டோனட்டுகள்

Jun-04-2016
Nilanjana Bhattacharjee Mitra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • அமெரிக்கன்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா - 1 கப்
  2. பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
  3. பேக்கிங்சோடா - 1/2 தேக்கரண்டி
  4. தயிர் - 3 தேக்கரண்டி
  5. சர்க்கரை பவுடர் - 1/2 கப்
  6. வெண்ணெய் - 1 தேக்கரண்டி
  7. சூடான பால் - 3-4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தை எடுத்து, மைதா, பேக்கி்ங் பவுடர், பேக்கிங் சோடா, சர்க்கரை வெண்ணெய், தயிர் ஆகியவற்றைச் சேர்த்து ஒன்றாகக் கலந்துகொள்ளவும். இப்போது சூடானப் பாலை மெதுவாகச் சேர்த்து மென்மையான மாவாகப் பிசைந்துகொள்க. மூடியிட்டு மூடி 1 மணி நேரம் எடுத்து வைக்கவும்.
  2. 1 மணி நேரத்திற்குப் பிறகு மாவை மீண்டும் பிசைந்து, ரொட்டி போல் உருட்டி குக்கீ கட்டரால் அல்லது டோனட் கட்டரால் அல்லது ஒரு கூரான முனையுடைய கிளாசினால் வட்ட வடிவத்தை வெட்டவும். அதன்பின்னர் மையத்தில் ஒரு ஓட்டையைப் போடவும். மீண்டும் அதை மூடி 1 மணி நேரம் எடுத்து வைக்கவும்.
  3. பொரிப்பதற்குக் கடாயைப் போதுமான எண்ணெய் விட்டு சூடுபடுத்தவும். டோனட்டுகளைச் சூடான எண்ணெயில் கவனமாகப் போட்டு சிறு தீயில் இருந்து மிதமானத் தீயில் வைத்துப் பொன்னிறமாக மாறும்வரை பொரிக்கவும்.
  4. கடாயில் இருந்து எடுத்து ஒரு பேப்பர் துண்டில் வைக்கவும்.
  5. சர்க்கரைப் பவுடரைத் தூவ, சாக்லேட் சாஸ் அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த டாப்பிங்கையாவது வைக்கவும்.
  6. அல்லது சர்க்கரை கிளேசால் பளபளக்கச் செய்யவும்.
  7. சர்க்கரை கிளேசுக்கு: பாத்திரத்தைச் சூடுபடுத்தி 2 கப் சர்க்கரை, 1 கப் தண்ணீர், 1/2 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ் எடுத்துக்கொள்ளவும். அடர்த்தியான சாசாக மாறும்வரை கலக்கவும்.
  8. சாக்லேட் கிளேசுக்கு: ஒரு பாத்திரத்தை எடுத்து, 1 கப் சர்க்கரைப் பவுடரையும் 2-3 தேக்கரண்டி கொகோ பவுடரையும் சலித்துக்கொள்ளவும். இப்போது பாலை மெதுவாகச் செர்த்து, அடர்த்தியான பேஸ்ட் உருவாகும்வரை கலக்கவும். இப்போது வெண்ணிலா எசென்சைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  9. உங்கள் டோனட்டுகளை உங்களுக்கு விருப்பமான கிளேசில் முக்கி, உண்டு மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்